21 Bölüm Devam ediyor வாழ்க்கை மர்மங்கள் நிறைந்தது. நம் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நம்மால் காரணங்கள் கற்பிக்க முடிவதில்லை. விஞ்ஞானத்தையும் எதார்த்தத்தையும் கடந்த பல கேள்விகள் உலகில் உலவி கொண்டிருக்கின்றன. அந்த கேள்விகளுக்கெல்லாம் பொத்தம் பொதுவாய், நமக்கு மேலொரு சக்தி என்ற முடிவுக்கு நாம் வந்து விடுகிறோம். அந்த மர்மங்களுக்கு எல்லாம் சில நேரங்களில் பதில் கிடைத்தால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும்...!