'காதல்' பிரபஞ்சத்தை கட்டியாளும் மாயாவி. அந்த மாய வலைக்குள் சிக்குவது ஆறறிவு உள்ள மனிதன் மட்டுமல்ல. உலகமே காதலின் இயக்கம்தான். இயக்குவது நீயானாலும் இயங்குவது நானல்லவோ!! உன் மாயை என்னிடம் செல்லாது என்று தலைநிமிர்ந்து நிற்கும் பாரதி கண்ட புதுமைப்பெண் அவள்.... எத்தனை தடைவந்தாலும் அதை தகர்த்தேறிந்துவிட்டு காதல் ஒன்றே என் உயிர்மூச்சு என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் ஆணவன். உலகை மயக்கும் காதல், ஏன் என்னவளின் உள்ளம் மட்டும் மயக்க மறுக்கிறது என்ற ஆராச்சியில் அவன் அறிந்த உண்மைகள் பெண்ணவளின் வாழ்வில் அவள் அனுபவித்த கோரங்கள். தன் உள்ளம் கவர்ந்தவளின் உள்ளத்தை கவர்ந்து அவளுடன் காதல் புரிவது மட்டுமல்ல என் வேலை, அவளின் இலட்சிய பாதையில் அவள் கைகோர்த்து அவள் மிதிக்கும் முட்களையெல்லாம் நானும் மிதித்து அவள் துயர் துடைப்பேன் என்று களம் இறங்கிய ஒரு