பெங்களுரின் மீது என்றுமே மழைக்கு ஒரு காதல் அழகான குளிர் நிலையை எப்போதும் அந்த ஊரை சுற்றியோ நிரப்பிவைத்து இருக்கும்.... அங்கு சுற்றி திரியும் பெண்களின் கண்களில் ஊடுறுவி உடல் திளைத்து ஊடல் கொள்ளும் மழை சாரல் ஒரு தலை காதலனுக்கு தன் காதலை வெளிப்படுத்த மழை நாள் ஒன்றை உருவாக்கி தருகிறது.,கைகளில் சாரலை அடக்கியபடி மழை பிடித்துக்கொண்டு ஒடும் குட்டிம்மாக்களுக்கும்.,கவிஞன் கையில் நல்லதொரு கவிதை பிரசவிக்கவும் வழி செய்யும் இந்த மழையே பெங்களூரின் பரிபூரணம் அதுபோன்ற ஒரு மழையில் கைகளை ஜன்னலுக்கு வெளியே நீட்டி சாரலை பிடித்துக் கொண்டாடியபடி கஃப்பச்சினோ குடிப்பதை போன்ற ஒரு இதமான அனுபவம் தான் இந்த கதையும்.... மழை நேரத்தில் காதலோடு கைகளில் அமர்ந்த கஃப்பச்சினோ......,
3 parts