
அந்தக் கறிவேப்பிலை மரத்தின் கடும்பச்சை நிற இலைகள் காற்றில் அசைந்தாடிக் குதூகலிப்பதை, அதை விடப் பன்மடங்கு உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னையில் குருத்து பரவசத்துடன் சிரித்தது. அது சாதாரண கறிவேப்பிலை மரமல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு நட்ட அம்மரம் இப்போது கூரையையும் தாண்டி வளர்ந்திருந்தது. சுலைமானியா(கற்பனை) கிராமத்திலுள்ள மக்களில் கால்வாசிப்பேரின் வீடுகளுக்கு கறிவேப்பிலை சப்ளை அம்மரம் தான். அந்த மரம் எவருக்கு சொந்தம் என்பது இதுவரையில் ஒருவருக்கும் தெரியவில்லை. அதை நட்டது யாரென்றும் கூட எவரும் அறியவில்லை. யாராவது ஒருவரின் வீட்டுக் காணியில் இருந்திருந்தால் கூட அது அவர்களது மரம் தான் என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கு நிலைமையே வேறு.All Rights Reserved