உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
62 parts Complete தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் .
முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி .
" எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை...
சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் .
களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும்.
களவுக்குக் கற்பு இன்றியமையாதது.
கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை.
நன்றி
கனி