நான் எது செய்தாலும் அதில் ஒரு குறை கண்டு பிடிப்பதையே வாடிக்கையாக வைத்துக்கொண்டு இருக்கிறாய். அப்படி எதை ஒழுங்காக செய்து முடித்தீர்கள்! என் தியாகங்களை பட்டியல் இட்டு பிரசங்கம் பண்ண, நான் ஒன்னும் உன் தகப்பன் மாறி அரசியல்வாதி இல்லை? "பாருங்க!. இது நமக்கு இருவருக்கும் நடக்கும் குடும்ப பிரச்சனை; என் அப்பனை இழுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை; அதை புரிஞ்சுக்குங்க முதல்லே" சரி, அப்ப எதற்கு எடுத்தாலும் என்னைப் பற்றி குறை கூறும் போது, என் அம்மாவை இழுக்கிறாயே! அது என்ன நியாயம்? அதை விடுங்க . 'எனக்கு இரண்டு லட்சம் வேணும் என்று சொல்லி ஒரு மாதம் ஆகிறது. "உன் தங்கை கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று சொன்னீர்களே! அது என்னவாம் !? 'அப்படி வா; கடவுள் உங்களைப் படைக்கும்போது ஒரு சூட்சுமம் வைத்து படைத்து இருப்பார் போல' அதனால் தான் எதையும் நேர்மறைய