நண்பன் கோபியிடம் இருந்து மூன்றாவது முறையாக ஷரிக்கு அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டே இருந்தது.
'செல்லை' எடுத்த தேவி- "இதோ பாருங்க உங்க நண்பருக்கு நீங்க மேனேஜராக இருக்கும் போது வீடு கட்ட உதவுனீங்க....
அவர் மகன் வெளிநாடு சென்று படிக்க மேலும் கடன் உதவி செய்தீங்க!...
இப்ப , நம்ம ஒரே பொண்ணு கல்யாணத்துக்கு இருக்கா ; ஏதாவது "கமிட்" பண்ணீங்க ? , நான் என் வீட்டோடு "கமிட்" ஆகி விடுவேன்".
குளித்து, சற்று ஆசுவாசமாக 'ஸைலண்ட்' மோடில் உள்ள போனை ஆன் செய்து பேசினான் - ஹரி.
டேய்! எப்படி இருக்க .நான் ஓய்வு பெற்று 3 வருடம் ஆகிறது.
அப்போது வந்தது தான் நீ; அதற்கு அப்புறம் வரவே இல்லை - கோபி;என்று என் பொண்டாட்டி ரொம்ப ஆதங்கப்படுகிறாள்.
மகளுக்கு அடுத்த மாதம் கல்யாணம் வைத்து இருக்கிறேன். அதற்கு குடும்ப சரிதமாக வந்துவிடு.
"அப்பா !!! ஹரி பிழைக்க கற்றுக்கொண்டார். நல்ல ராஜதந்திரம் ; உண்மையை எப்படி பக்குவமாக சொல்லித் தப்பிக்கிறார்." என்று மனைவி நினைப்பதை எண்ணி சந்தோஷப் பட்டுக் கொண்டு பேச்சை தொடர்ந்தான் ஹரி.
அப்படியா , ரொம்ப சந்தோவும் !!
இப்படி ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காது. ஆனால் இதை நான் ஏற்றுக்கொண்டால் என் மனைவி சம்மதிக்க மாட்டாள்.
Sorry, நட்புதான் முக்கியம்.
இங்கே வரும் போது நாங்கள் வந்து பார்க்கிறோம். என்றும் எங்கள் ஆசீர்வாதம்.
கண்கள் நீண்டன; பிறகு விரிந்தன.
என்ன என்பதற்குள் "voice recorder' ஒலித்தது.
என் மகன்-கெளசிக்; உனக்கும், எனக்கும் குடும்பத்தோடு LONDON சென்று வர TICKET ஏற்பாடு செய்து உள்ளான்.
அவனுக்கு உன் மகள் கல்யாணத்திற்கு பிறகு இரண்டு மாதம் கழித்துத் தான் என்பதால் , நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.
உன் சம்மதம் இருக்கும் என்று நானும் உறுதி அளித்துவிட்டேன்.
இது அவன் உனக்கு செய்யும் "கைமாறு" அல்ல.... எனக்கு செய்யும் கடமை.
தப்பாக நினைக்காதே ?!
கண்களில் கண்ணீர் கரைந்து வற்றத்தொடங்கியது.
- முற்றும்.
R.selvaraj,