;உ
🌺🌺என் அமுத விசமடி 🌺🌺
🍀🍀கதைச் சுருக்கம் 🍀🍀
நாயகன் முகிலன். எம்டெக் கடைசி ஆண்டு படிக்கிறான். தந்தை ஒரு கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்கிறார். மிடில் கிளாஸ் குடும்பம். தாய் தையல் வேலை செய்கிறார். மூன்று பெண்கள். நாயகி சிற்பிகா. முகிலன் படிக்கும் கல்லூரியில் பிடெக் கடைசி ஆண்டு.
தந்தை சப் கலெக்டர். தாய் இல்லத்தரசி. ஒரு அண்ணன்,தங்கை. நாயகனும், நாயகியும் காதலர்கள். அடுத்த நாயகி மோனிகா. பெரிய கோடீஸ்வரி. அவளும், முகிலனை விரும்புகிறாள். ஆனால், நாயகன் அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. மோனிகா, முகிலனுக்கும், சிற்பிகாவுக்கும், திருமணம் என்றவுடன் அதை நிறுத்தி முகிலனைத் திருமணம் செய்கிறாள். இந்தத் திருமணத்தை முகிலன் ஏற்றுக் கொள்வானா? முகிலனும், சிற்பிகாவும், ஒன்று சேர்வார்களா? என்பதே கதை.
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்னில் நீ.