இதுவரை மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் தோன்றியுள்ளது. ஆனால் அந்த மூன்று முறையின் நினைவுகள் பல நூறு முறை தோன்றியும் என்னை வாட்டியும் உள்ளது. அந்த நினைவுகளின் தொகுப்பே இந்த நினைவுக் குறிப்பு. இதை வாசித்த பிறகு "How're you doing?", "Are you fine?", "Do you need help?" என்று யாரும் என்னிடம் கனிவுடன் வினவ முயல வேண்டாம் - நான் பதிலளிக்க மாட்டேன். When I started writing this, I didn't think of sharing this with anyone. எனவே இக்குறிப்பில் என்னை நிர்வாணமாக நிறுத்திக் கொள்ள முடிந்தது. இதை வாசிக்கும் போது என்னை நானே ரசித்து புன்முறுவலுடன் சிரித்தேன். காரணம் அந்த நிர்வாணத்தின் அழகே என்று நம்புகிறேன்.