சில கதைகள் ஒற்றை வழி பாதையாக ஒரு அழகிய அழுத்தமான கதையை காட்டி செல்லும். சில கதைகள் சிறுநகர சாலையாகவோ, பெருநகர சாலையாகவோ கதைய ினோடு கூடி, சுற்றி இருக்கும் வேடிக்கை விசித்திரங்களையும் பேசி செல்லும். ஒரு சில கதைகள் நாற்கரசாலையாக பயணிக்கும். இந்த கதையை நாற்கரசாலை கதையாக எழுத முற்பட்டிருக்கிறேன். சாலையின் நான்கு வழிகளிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு கால நிலையில் தங்கள் வாழ்க்கையில் பயணிப்பதை உங்களுக்கு காட்ட முயற்சித்திருக்கிறேன். விதி அவர்களை காதல், நட்பு, மோதல், என்னும் கண்களுக்கு தெரியாத இழைகளால் பிணைத்து அழைத்து செல்கிறது. அந்த இழைகளில் எவை வலுப்படுகின்றன எவை அறுபடுகின்றன என்பதை கதையின் போக்கும், கதாபாத்திரங்களின் தேர்வும் முடிவு செய்கிறது.