வாழ்க்கையில் எந்த ஒரு குறிக்கோளும் இன்றி, பட்டாம்பூச்சியாய் தன் வாழ்க்கையில் சுற்றி வருபவள் தான் நம் நாயகி, கிராமத்து பின்னணியை சேர்ந்தவள். திருமணம் செய்து, பிள்ளைகள் பெற்று, ஒரு நல்ல குடும்ப தலைவியாக இருப்பதே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட நம் நாயகிக்கும், எந்த ஒரு செயலையும் தன் அதிகாரத்தினாலும், ஆளுமையாலும் செயல்படுத்தும் நம் நாயகனுக்கும், எதிர்பாராத விதமாக சந்தர்ப்ப வசத்தால் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பின்பு, நம் நாயகிக்கு எப்படி அவளின் வாழ்க்கையில் குறிக்கோளை ஏற்படுத்தி. அதில், அவளை வெற்றியும் காண செய்கிறான் நம் நாயகன் என்பதே இந்த கதை.