ஒரு மனிதன் ஏற்படுத்தும் பாதிப்புகளின் தாக்கம் அவன் வாழும் வரை நீடிக்கும், ஒரு இயக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகளின் தாக்கம் சில நூற்றாண்டுகள் வரை நீடிக்கும். ஆனால் ஒரு நாட்டையே ஆக்கிரமித்திருக்கும் ஓர் பெரிய மதம் ஏற்படுத்தும் பாதிப்புகளின் தாக்கம், பல்லாயிரம் ஆண்டுகள் நீண்டு, மனித குலத்தின் வாழ்க்கை முறையிலேயே பல பெரும் மாற்றங்களை நிகழ்த்தும். அம்மாற்றம் அம்மனிதர்களுக்கு நன்மையானதா அல்லது தீமையானதா என்பதை விட, அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அந்த மாற்றங்கள் மட்டும் காலமிருக்கும்வரை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்.