அறிவா ?.... ஆற்றலா ? படித்தால் அறிவு வரும் ! பழகினால் ஆற்றல் பெருகும் ! ஆக படிக்க வேண்டும் , பிறகு பழக வேண்டும். எதைப் படிப்பது... ஏன் படிக்க வேண்டும் ... எதற்கு படிக்க வேண்டும்... எங்கே படிப்பது...... எப்போது படிப்பது... யாரைப் படிப்பது.... இப்படி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் அறிவு வளரும்.... ஆனால் ஆற்றல் பெற்றால் தான் நாம் நாமாக இருக்க முடியும். அதற்காக எல்லா அனுபவங்களையும் ஒருவரால் ஒரு பிறவியில் பெற முடியாது ஆகவே பிறர் படித்து, புரிந்து கொண்டு பகிர்ந்த புத்தகங்களை நாம் படிக்க படிக்க நம் செயல் திறன் பல மடங்கு அதிகமாகும். அங்கே நம்முடைய மனம் ஒரு வழியை காட்டும். காட்சிகள் தென்படும். பாதைகள் புலப்படும். பயணங்கள் தொடர்கதையாக மாறும் .... வாழ்வு சிறக்கும்..... பிறர் வாழ்விற்காக போராட தோன்றும். அந்தப் போராட்டம் முதலில் நம்முள் நிகழும்.. நம் கற்பனை சிறகுகள்