
அதற்குள் அந்தப் பாட்டி பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மீண்டும் ஒருமுறை தன் முகத்தை பார்த்து தன்னை சரிசெய்துக் கொண்டார். நான் பாட்டியின் இந்த செயலை சற்றே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் சுதாரிப்பதற்குள், இரு கைகளிலும் தண்ணீர் எடுத்துப் பருகத் துவங்கினார். வேண்டிய அளவு தண்ணீர் குடித்து முடித்துவிட்டு, அதிலேயே கையைக் கழுவிக்கொண்டு, உதட்டையும் துடைத்துக்கொண்டார்.All Rights Reserved