
"மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா.?" கையில் இருந்த நோட்டில் அவள் பெயரை எழுதிக் கொண்டே கேட்டார் பெண் காவலர். "மிஸஸ் ரம்யா.." "ஹஸ்பண்ட் பேரு.." "அபிமன்யூ.." "இப்ப எங்க இருக்காரு.?" கேள்வி கேட்ட அந்த பெண் காவலர் கதவோரத்தில் நின்றிருந்த இவனை பார்த்து விட்டார். சல்யூட் அடித்தபடி எழுந்து நின்றார். "மார்னிங் சார்.." "இறந்துட்டாரு மேடம்.." என்று சொல்லிக் கொண்டே திரும்பிய ரம்யா அபிமன்யுவை கண்டதும் கண்களை சுருக்கினாள். அவனை இவ்விடத்தில் பார்ப்போம் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. அழியாத கோபம் அவளின் முகத்தில் தெரிந்தது. "என் புருஷன் செத்து போய் மூனு வருஷம் ஆச்சி மேடம்.." கணவனை முறைத்துக் கொண்டே சொன்னாள் ரம்யா.Все права сохранены