திருவரங்கன் உலா - நம்பெருமாள் வனவாசம் 1. கி.பி. 1323ஆம் ஆண்டு நிகழ்ந்த உலுக்கான் என்ற முகம்மது பின் துக்ளக் இன் படையெடுப்பு: திருவரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் (கி.பி. 1203 - 1323) தம் சிஷ்யர்களுக்கு நல் உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் முகம்மதிய மன்னனான கியாசுதீன் துக்ளக் கி.பி.1321இல் டில்லி சுல்தானாக ஆட்சி செய்து வந்தான். தனது மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான் (இவனே பிற்காலங்களில் முகம்மதுபின் துக்ளக் என்று அழைக்கப்பட்டு வந்தான்). உலூக்கான் காகதீயர்கள் அரசனான பிரதாபருத்ரனை வாரங்கல்லில் கி.பி. 1321இல் வெற்றி கொண்டான். அதன்பிறகு, தென் இந்தியாவின்மீது படையெடுக்க விரும்பினான். தென் இந்தியப் பகுதியை வெற்றி கொள்ள வேண்டும் என்பதைவிட தென் இந்தியாவில் அனேக தங்க வைரங்களின் கருவூலமாகத் திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க நாட்டம் கொண்டவன் இவன். கி.ப
17 parts