"அம்மா... ஒரு காப்பி..." என்று வழக்கம்போல கேட்டுக்கொண்டே எழுந்தாள் தமிழினி @ இனி... எந்த பதிலும் வராமல் போகவே மெல்ல கண்விழித்து பார்த்தாள். தான் இருந்த புதிய அறையைப் பார்த்த உடன்தான் அவளுக்கு தன் நிலை ஞாபகம் வந்தது. சட்டென அறையை பார்வையால் அலசினாள்... அவனைக் காணாததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்... யாரை என்று யோசிக்கிறீர்களா??? அவள் கணவனை தான்... ஆம்.. நேற்று முதல் அவள் திருமதி... அதுவும் திருமணத்திற்கு 10 நிமிடம் முன்பு மட்டுமே அவளிடம் அறிவிக்கப் பட்டது... அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பே அவள் கழுத்தில் தாலியும் ஏறியது.... ★★★★★ இனி-உடன் பயணிக்க தொடர்ந்து இணைந்து இருங்கள்...★★★★★ ©ராஹமிAll Rights Reserved