ஏதேனும் எழுத தூண்டும் போதெல்லாம், எதையேனும் கிறுக்கி விட நினைத்து, பேனாவை எடுப்பேன். இன்றோ, விசைப்பலகையை எடுத்துள்ளேன்...
எனக்கு பேனாவும் பரிச்சயம் தான், விசைப்பலகையும் பரிச்சயம் தான்.. ஆனால், எழுத்துக்களை தவிர,... எதை எழுத வேண்டுமென புரியாமல் எதை எதையோ எழுதி தொலைத்து விடுகிறேன்...
எதை எழுத போகிறோம் என்ற விழிப்புணர்வு இன்றி, எதையோ எழுத துவங்கி பின்பு எதிலோ முடிகிறோன், மலையில் துவங்கி கடலில் கலக்கும் நதிகள் தான் என் எழுத்துக்களும்... எதில் எதிலோ பாய்ந்து உங்களை வந்தடைகிறது. அது செல்லும் வழி காடாக இருந்தால், அதன் தன்மை மாறா தூய்மையோடு போய் சேரும். மாறி மாந்தர் வாழும் கேவல் நகரமாய் இருந்தால் அது கூவம் போல சாக்கடையாகி தான் போய் சேரும்...
எது எப்படியோ, தேங்கி நிற்கும் சேராக இல்லாமல், பாய்ந்து கொண்டிருக்கும் ஆறாகவோ, சாக்கடையாகவோ இருக்கவே