காதல் நதி.. என் காதல் நதியிலிருந்து சில . 1... அவளைப் பார்க்கும்வரை மனசில் சந்தோசமிருந்தது.. அவளைப் பார்த்தவுடன் சந்தோசமே மனதாய் மாறியது. 2. மனதிற்கு பிடித்தமானவர்களை வழியனப்பும் போது சரியான நேரத்திற்கு கிளம்பும் ரயிலை விடவும் கொடுமையானது உலகில் வேறில்லை. 3. நீ ஒற்றைப் பார்வையில் சொல்லிவிடுகிறாய் மனசெல்லாம் அப்பிக்கிடக்கும் அன்பை. நான் வார்த்தைகளுக்குள் சிக்கி திணறுகிறேன். 4. வேரின் மீதே பூ உதிர்வதைப்போல இயல்பாய் மனசின் எல்லாம் பகிர மனசொன்றை தேடி அலைகிறது மனசு. 5. அவளின் சின்னசின்ன சிரிப்பால் பூத்துக்கொண்டே இருந்தது என்னுள் ஏதோ. 6. என் இயல்புகளை அவளிடம் தொலைத்துவிட்டேன். 7. இவ்வளவு சந்தோசங்களை எங்குதான் வைத்துருக்கிறாய்.. உன்னை பார்த்தவுடன் எனக்குள் தொற்றிக்கொள்கிறது. 8.இருவரும் நடந்து வந்தோம் சோளம் சாப்பிட்டோம் அவள் பாதியை வேண்டாமெAll Rights Reserved