காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )
53 جزء
undefined أجزاء إكمال உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை.
யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன