வணக்கம்
நான் ரமணி சந்திரன் அம்மாவின் கதைகளுக்கு தீவிர ரசிகை. அவரது அனைத்து கதைகளையும் பல முறை படித்துவிட்டேன். கதை எழுத ஆரம்பித்தபோது எப்படி எழுதுவது என்ற இலக்கணம் தெரியாது. அதன் பிறகு கவிதையை கிறுக்க ஆரம்பித்தேன். அதுவும் பள்ளியோடு நின்று போயிற்று. மீண்டும் என் எழுதும் ஆர்வம் தொடங்கியது பத்து வருடங்களுக்கு முன்பாக ரமணி சந்திரன் அவர்களின் கதைகளை படிக்க சந்தர்ப்பம் கிடைத்தபோது. அப்போதும் கூட ஆரம்பித்துவிடுவேனே தவிர முடிக்க தெரியாது. அதன் பிறகு வேறு நாவலாசிரியர் கதைகளை விரும்பி படிக்கவில்லை. தேடி தேடி அம்மாவின் கதைகள் அனைத்தையும் படித்தேன். 7வருடங்களுக்கு முன்பாக நான் நிறைய எழுதினேன். கடைசியில் 2014ல் முகநூலில் நுழைந்தேன். அங்கே ஒரு குழுமத்தில் எனக்கொரு களம் அமைத்து கொடுத்தார் நண்பர் ஒருவர். எனக்கு கதாசிரியர் என்ற அங்கீகாரம் கொடுத்து ஊக்குவித்தவருள் அவர் முதன்மையானவர்.. இது தான் நான் கதை எழுத வந்த கதை.. வாசித்தவர்களுக்கு நன்றிகள் பல...
அன்பான வாசக பெருமக்களுக்கு சின்ன வேண்டுகோள். எனது படைப்புகளை படித்துவிட்டு நிறை குறைகளை குறிப்பிடுங்கள். அதுவே என்னை பட்டை தீட்டிக்கொள்ள பெரிதும் உதவும்.
நன்றி! நன்றி!
- Chennai, Tamil Nadu
- JoinedJanuary 6, 2018
- website: aieshakwrites.in/
Sign up to join the largest storytelling community
or
![Aieshak7](https://img.wattpad.com/useravatar/Aieshak7.64.139168.jpg)
எழுத்தாளர்கள் இணைந்த ரிலே கதை இது.. https://www.wattpad.com/story/276488462View all Conversations
Stories by Aiesha Khaleel
- 12 Published Stories