கொரோனா கல்யாணம்
அன்று யாழினி வீடே கலைக் கட்டிருந்தது .பர்வதம்-ராகவனின் ஒரே மகள் யாழினி அவளை இன்று பெண் பார்க்க வருகிறார்கள்.மாப்பிள்ளை ஒரு மருத்துவர்.பர்வதம் சமையல் அறையில் பாயாசத்திற்க்கு இன்னும் கொஞ்சம் ஏலக்காய் தூக்களாக போட வேண்டும்,வடை நல்ல மொறுவலாக எடுங்க என வேலை வாங்கி கொண்டிருந்தாள்.அம்மாடி பர்வதம் யாழினி ரெடியாயாயிட்டாளா மாப்பிள்ளை வீட்டார் பக்கத்தில் வந்து விட்டார்களாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார் தோ போய் பாக்கறேங்க என் அக்காவும் உங்க தங்கச்சி பொண்ணுங்களும் தான் ரெடிப் பண்ணிட்டிருக்காங்க என்றாள்.சரிமா கொஞ்சம் சீக்கிரம் போய் என்னனுப் பாரு
என்றார்.யாழினி சீக்கிரம்மா எல்லாம் முடிஞ்சுட்டா எனக் கேட்டுக்கொண்டே வந்தார் பர்வதம். என் கண்ணே பட்டுடும் போல இருக்குடி என்று தன் மகளுக்கு நெட்டி முறித்தாள் பர்வதம்.கீழே மாப்பிள்ளை வீட்டார் கார் சத்தம் கேட்டவுடன் ராகவன் அவர் மச்சான் சகலை அனைவரும் ஒடி சென்று வரவேற்த்தனர் மாப்பிள்ளை வீட்டினரை.மாப்பிள்ளை கௌசிக் மற்றும் அவன் அம்மா அப்பா மூவர் மட்டுமே வந்திருந்தனர்.கீழே பர்வதம் அவள் அக்கா இருவரும் வந்து மாப்பிள்ளை வீட்டினரை வரவேற்று உபசரித்தனர் பர்வதம் மாப்பிள்ளை அம்மாவிடம் எங்கே உங்கள் உறவினர்கள் யாரும் வரவில்லையா என வினவினார் உடனே அவர் இல்லை என் மகனிறிக்கு இந்த கொரோனா காலக்கட்டத்தில் கூட்டம் கூட்ட சுத்தமாக பிடிக்கவில்லை என்றார்.யாழினியைய் அழைத்து வந்து காண்பித்தனர் கௌசிக் அம்மா கோதை மற்றும் தந்தை கபிலன் இருவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது கௌசிக்கும் சம்மதம் என தலையசைத்தான் ஆனால் பெண்ணுடன் கொஞ்சம் பேச வேண்டும் என்றான்.இருவரும் போய் பேசிவிட்டு வந்தனர் வந்த இருவர் முகத்திலும் மிக மகிழ்ச்சி.என் விருப்பம் ஒன்றை யாழினியிடம் சொன்னேன் அவளுக்கு முழு சம்மதம் என்றான் கௌசிக்.பின் வீடு சென்று கலந்தாலோசித்து நிச்சய தேதி பற்றி சொல்வதாக சொல்லி சென்றனர்.