கதிரும் முல்லையும்

409 37 2
                                    

சிவராத்திரி அன்று,

கதிர் ஜீவாவிடம் போனில் பேசிய பின்பு,

முல்லை : என்ன சொல்றாங்க ?
கதிர் எரிச்சலுடன் "ஆமா, சொல்றாங்க" என முனகிவிட்டு உள்ளே செல்ல முற்பட,

முல்லை அப்பாவை காணோம் என்று போனை எடுப்பதை பார்த்து,

கதிர் : இந்தா.... அவர் வர மாட்டார். இந்நேரத்துல போன் பண்ணி அவர தொல்ல பண்ணாத.

முல்லை : ஏன் வர மாட்டார்?! நான் னா எங்க அப்பாக்கு உசுரு. கண்டிப்பா வருவாரு.

கதிர் முல்லையை கடுப்புடன்,

நீ என்ன லூசா? நா இருக்கும் போது எப்படி வருவாரு? அதுவுமில்லாம எல்லாரும் கோவிலுக்கு போறதே அவருக்கு தெரியாது.அப்பறம் எப்படி வருவாரு? பேசாம போய் தூங்கு.

முல்லை : என்னது? அப்பாக்கு தெரியாதா? அப்போ......?! ஓ.....! எல்லாம் உங்க வேலைதானா?

கதிருக்கு கோபம் தலைக்கேறியது.ஆனாலும்
தன் கோபத்தை கட்டுபடுத்தி,

இதோ பார்! நீ இருப்பன்னு எனக்கும் தெரியாது. சும்மா எரிச்சல கிளப்பாம போய்டு.

முல்லைக்கும் கோபம் பொத்துக்கொண்டு வர,

" எங்களுக்கு தெரியும். உங்க வேலைய பாருங்க" ன்னு சொல்லிட்டு உள்ளே சென்றாள்.

கதிர் "எல்லாம் என் நேரம்" என நினைத்துக்கொண்டே உள்ளே செல்ல,

சமையலறையில், முல்லை "எல்லாரும் என்ன நினச்சிட்டு இருக்காங்க என்ன பத்தி? நாளைக்கு வரட்டும். பேசிக்கறேன்" என மனசுக்குள் திட்டியபடியே சமையலறையை சுத்தம் செய்ய, சட்டென்று,
அய்யோ! இவக சாப்டாங்களா? இல்லையா? ன்னு தெரியலயே. போய் கேட்டா எரிஞ்சு விழுவாங்களே! என்ன பண்றது?

மெதுவாக ஹாலுக்கு வர, கதிர் வருவதை கவனிக்காமல் மோதி விட,
ஷ்ஷ்......! கதிர் கோபத்துடன் கண்களை மூடி திறக்க முல்லை பயந்து வார்த்தைகள் தடுமாற.... இல்ல... நா... வந்து.....

கதிர் அவள் தடுமாறுவதை கண்டு கோபம் தணிந்து எதுவும் சொல்லாமல் சென்று சொம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அறைக்கு செல்ல

முல்லை  சுதாரித்து, சாரி...! நான்தான் கவனிக்கல. மன்னிச்சிடுங்க.

கதிர் : ம்ம்..  தலையாட்டியபடி செல்ல

முல்லை : சாப்டியளா?

கதிர் ஒரு நிமிடம் தன் காதுகளையே நம்ப வில்லை.

என்ன?! நம்மளயா கேட்டா? இவளா? இருக்காதே! கதிரு நின்னு அசிங்கப்படாத.அவ போன்ல  யார் கிட்டயாவது கேட்ருப்பா.உன்ன இல்ல.

கதிர் செல்ல,

முல்லை கோபத்துடன்,

"உங்களதான் கேட்டேன்.சாப்டா, "ஆமா"ன்னு சொல்லுங்க. இல்லன்னா "இல்ல"ன்னு சொல்லுங்க.இப்படி ஒன்னுமே சொல்லாம போனா என்ன அர்த்தம்"?

கதிருக்கு இனம் புரியா உணர்வு.
மனதில் சிறு சந்தோஷம் இழையோட, அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் கெத்தாக திரும்பி புருவத்தை உயர்த்தி,

ஏய்...! என்ன?

முல்லை பொறுமையிழந்து,

"சாப்டியளா? இல்லையா"?

கதிர் :" சாப்பிடலேன்னு சொன்னா ஊட்டி விடப்போறியா"?

கதிர்Where stories live. Discover now