கதிர் : சாப்பிடல ன்னு சொன்னா ஊட்டி விடப்போறியா?
இதை சற்றும் எதிர்பாராத முல்லை பேச்சற்று நின்றாள்.தலை முதல் முழுதும் இனம் புரியா உணர்வு ஊடுருவ,
கதிரும் ஒரு கணம் செயலற்று நின்று, ஐயோ! உளறிட்டோமே.என்ன நினப்பா?! ஓடிரு கதிரு.
முல்லை ஏதோ சொல்ல வாயெடுக்க,
கதிர் : முடியாதுல்ல.அப்பறம் என்ன? போ. போய் சாப்ட்டு நிம்மதியா தூங்கு.
கதிரு வேகமாக நகர,
முல்லை : ஏங்க.... நில்...!
கூப்பிடுவதற்குள் கதிர் சென்று விட
முல்லை முற்றத்தில் அமர்ந்திருக்க கதிர் சொன்னதே திரும்பத்திரும்ப காதுக்குள் ஒலிக்க,
இவுகளா இது? இப்படி பேசுறாக? டக்குன்னு சொல்லிட்டாக. ஊட்டி விடனுமாம்ல!
நினைக்கும்போதே உடல் சிலிர்த்து கன்னங்கள் சிவக்க, தனக்கு தானே சிரித்து கொண்டாள்.
அறையில்,
கதிருக்கு நிலை கொள்ளவில்லை.
என்னடா கதிரு?
டக்கு ன்னு இப்படி சொல்லிட்ட.
அவ என்ன நினப்பா?
ஏற்கனவே உனக்கு நல்ல பேரு.
இதுல இது வேறயா?அவ ஏற்கனவே வில்லன பாக்கற மாதிரி பார்ப்பா.இனி சுத்தம்.
அவ ரூமுக்கு வரதுக்குள்ள தூங்கிருடா கதிரு.
முல்லை (தனக்குள்) உள்ளே போகலாமா ? தூங்கிருப்பாகலா?
கதிர் (தனக்குள்) எங்க இவள காணோம்? அங்கேயே தூங்கறாளா? போய் பார்ப்போமா?
முல்லை அறைக்கு வெளியேயும்
கதிர் அறைக்கு உள்ளேயும் ஒருவரை ஒருவர் நினைத்து தவிக்க,ஓட்டில் தேங்காய் விழும் சத்தம் கேட்டு முல்லை பயத்தில் கத்த,
கதிர் பதறியடித்து ஓடிவர,
முல்லை தன்னையறியாமல் முல்லை கதிரைக் கட்டிக்கொண்டாள்.கதிரும் அவளை அரவணைத்து தட்டிக்கொடுத்தான்.
ஏய்... ஒண்ணுமில்ல. பயப்படாத...பயத்தில் தாயிடம் தஞ்சம் புகும் மழலை போல கதிருக்குள் பதுங்கினாள்.
இருவரின் இதய துடிப்பை தவிர எங்கும் நிசப்தம்.
தன்னிலை உணர்ந்து இருவரும் சட்டென்று விலகினர்.
முல்லை முகம் முழுவதும் சிவந்திருக்க,
கதிர் வெட்கப்பட்டு கீழே குனிய, இருவரின் மனமும் இருவரின் அருகாமையை தேட,ஒருவழியா இருவரின் கண்களும் சந்திக்க, இருவரும் நெருங்கி வர,
கதிரண்ணே....!
வேற யாரு? நம்ம கரடிதான். சாரி... சாரி.... கண்ணன் தான்.
அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா? கதிர் சற்று சத்தமாக முனக,
முல்லை வெட்கப்பட்டு உள்ளே ஓடினாள்.கதிர் ஓடியவளை பார்த்து சிரித்து கொண்டே கதவை திறந்தான்.