பௌர்ணமி பூவே 💫 ...கோவா, Goa :
ராம்கிருஷ்ணா
( hero )...........இரயில்வே ஸ்டேஷன் அலறும் வகையில் சத்தமாக கத்தினான் வெங்கட் அங்கிருந்த அனைவரும் இவனை பார்த்து முறைக்க ராம் வேகமாக ரயிலில் இருந்து கீழே இறங்கி வெங்கட் அருகில் வந்து நின்றான் !இப்போ எதுக்குடா அவ்வளோ சவுண்டா கத்துன யூஸ்லெஸ் பெல்லோ...... அவன் திட்ட திட்ட வெங்கட் தன் காதில் கையை வைத்து மூடிக் கொண்டு யாரையோ திட்டுவது போல் நின்று இருந்தான் .
என்னடா திட்டி முடிச்சிட்டியா கேட்டுக் கொண்டே காதில் இருந்து கையை எடுத்தான் வெங்கட் ! போடா ... என்று சொல்லிவிட்டு ராம் திரும்பி செல்லும் போது ட்ரெயினும் புறப்பட தயாராக இருந்தது ! மீண்டும் ராம்கிருஷ்ணா ..... என அழைத்து
நீ நிச்சயமா தமிழ்நாட்டுக்கு போயே தான் ஆகனுமா ........ ஆமா நிச்சயமா என்றான் ராம்
இவன் தலையில் கைவைத்து கொண்டு டேய் நிச்சயமா அந்த பொண்ண தேடி போய் தான் ஆகனுமா....... ஆமா அவள தேடி கண்டம் விட்டு கண்டம் தாண்டி கூட போவேன் என்றான்
டேய் அந்த பொண்ணோட பேர் கூட உனக்கு தெரியாதே .......... எனக்கு பேர் தேவையில்லை இந்த ராம் க்கு எப்போமே அவ சீத்தா தான் என்றான் .
ஐயோ ! டேய் அந்த பொண்ணோட முகம் கூட தெரியாதே ........... சீத்தாவ எப்படி கண்டுபிடிக்கறதுன்னு எனக்கு தெரியும் ! ராம் சொல்லிவிட்டு அவனுக்கு டாட்டா காட்டிகொண்டு உள்ளே சென்றான் .பகவானே !!!! இவனுக்கு ராமரோட பேரையும் கிருஷ்ணரோட பேரையும் சேத்து ஒரே பேரா வச்சதுதான் ரொம்ப பெரிய தப்பு ! கடவுளே இவன் தேடற பொண்ண சீக்கிரமா கண்ணுல காட்டு அவனுக்கு ! என்று தானாக புலம்ப அருகில் இருந்த பெரியவர் ஏம்பா அந்த தம்பி எந்த நம்பிக்கையில் ஒரு பொண்ண தேடி அவ்ளோ தூரம் ! இவனிடத்தில் கேட்க ..