தணிகாசலம் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் அந்த ஊரில் இருந்த விளைச்சல் நிலங்கள் இவர் கண்ணில் பட்டால் அடுத்து சில நாட்களில் சமனிடப் பட்டு எல்லைக் கல் வைக்கப் பட்டிருக்கும்.
நியாயமான முறையில் அந்த நிலத்தை கிரயம் செய்ய முடியவில்லை என்றால் வன்முறையால் கையகப் படுத்தும் நெறியாளர். அந்த தொழிலில் வேறு யாரையும் அவர் வளர விட்டது இல்லை புதிதாக அந்த தொழிலில் வருபவர்கள் அவரின் மிரட்டல் அல்லது அவர் ஆட்கள் மூலம் சில அடிகளை பரிசாக பெற்று தொழிலை விட்டு சென்று விடுவார்கள் இதனால் சில துர் மரணங்களும் நிகழ்ந்துருக்கின்றன.
அந்த ஊரில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் பல அரசு அலுவலர் இருந்தாலும் அவர் தான் பல பஞ்சாயத்துக்கு தீர்ப்பு வழங்கியது.
இவ்வாறு சில தொழில்கள் செய்து அந்த ஊரில் பெரும் செல்வந்தராக இருந்தார்.
இந்த நிலையில் ஒருநாள் அரசு அறிவித்தது "கொரானா பரவல் காரணமாக யாரும் வீட்டை விட்டு வெளியேற கூடாது." என்று யாரும் வெளியில் நடமாட்டம் இல்லாவிட்டால் தன் பணிக்கு சிறந்த நேரம் என்று மகிழ்ச்சி ஆனார் தணிகாசலம்.
வெளிநாட்டு பிரயாணி ஒருவர் அங்கு வந்தவர் ஊர் அடங்கு காரணமாக அங்கேயே தங்க நேர்ந்தது. அவர் அந்த ஊரில் நிலம் வாங்க ஆசைப்பட தணிகாசலம் அவர் பார்வைக்கு வந்தார்.
தணிகாசலம் அவர் தங்கியிருந்த விடுதிக்கு சில நாட்கள் வந்து சென்று கொண்டிருந்தார். சட்டென ஒரு நாள் பத்திரப் பதிவு நாள் குறிக்க பட்டது. அந்த வெளிநாட்டு காரர் பத்திர பதிவு அலுவலருடன் வழிமேல் விழி வைத்து காத்திருக்க தணிகாசலம் வரவில்லை.
அவர் தணிகாசலத்திற்கு அழைப்பு விடுக்க திருமதி தணிகாசலம் அழைப்பை ஏற்றார். தணிகாசலம் கொரானா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் உள்ளார் என்று தெரியவந்தது. பத்திரப் பதிவு நிறுத்தப் பட்டது.
சில நாட்களில் தணிகாசலம் தனிமை படுத்த பட்டு இறந்தும் போனார். அவருக்கு தொற்று வர காரணமான வெளி நாட்டு காரர் திடகாத்திரமாக இருப்பது விந்தையாக தான் இருக்கிறது. ஆனால் அவர் குடும்பம் தான் அவர் பங்குதாரர்களால் சொத்துக்கள் ஏமாற்ற பட்டு தெருவில் நிற்கிறது.
அந்த ஊரில் எஞ்சிய நிலங்கள் பசுமையாக உள்ளது இப்போது தணிகாசலம் மறைவுக்குப் பின் யாரும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வரவில்லை என மக்கள் மகிழ்ச்சியாக இருக்க, புதிதாக சுரேஷ் என்பவன் காலெடுத்து வைத்தான் அந்த ஊருக்குள்.
