04. Rainy day

23 8 25
                                    

சந்தோசத்தில் குதூகலித்து பார்வையிட்டு கொண்டிருந்த kate ன் கண்கள் விரிய, அவளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த போகும் இறுதி நிகழ்ச்சியும் ஆரம்பமாகியது.

முழுவதும் கருப்பு நிறத்தில் நீண்ட ஆடையை அணிந்து கையில் இரத்தின ஊன்றுக்கோலுடன் வந்தவன் அச்ச அசல் தீய மந்திரக் காரனை போலவே காட்சி அளித்தான்.

அவனது மாயங்கள் அனைத்தும் மற்றைய மந்திர காரர்களை விட சற்று பலமாகவும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய விதமாகவும் இருந்தது.

நெருப்பின் மூலமாக கருப்பு நிற வண்ணத்துப்பூச்சிகளை உருவாக்கினான்.

சிறிய பந்துக்களை வெட்ட, அதிலிருந்து இரத்தம் தாரை தாரையாக வழிந்தது. அதிலிருந்து ஒவ்வொரு அங்கங்களும் இழக்கப்பட்ட பொம்மைகள் வெளியே வர செய்தான்.

ஒருவனை படுக்க செய்து அவனது மார்பை கிழித்து, இதயத்தை வெளியே எடுத்தான்.

அதனை கையினால் மூடி திறக்க, அதிலிருந்து கறுப்பு காகம் கையிலிருந்து பறந்து சென்றது.

இவனது magic போக போக பயங்கரமானதாக மாற, கூடாரத்திலிருந்து அரைவாசி பேர் எழுந்து சென்றனர்.

Kate ன் பொறுமை எல்லையை தாண்டி செல்ல,  எழுந்து பக்கத்தில் இருந்த தக்காளி ஒன்றை எடுத்து அந்த Magician மீது வீசினாள்.

அவளை தொடர்ந்து மற்றவர்களும் கைகளில் கிடந்ததை தூக்கி Magician மீது வீசினர்.

Magician அவளை நோக்கி பார்வையை வீச,

அவனது பார்வை சற்று பயத்தை உண்டாக்க, அவளது பெற்றோர் அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

"What have you done Kate?!" என்று அவள் அம்மா வீட்டினுள் நுழைந்த அடுத்த நொடி சற்று பதற்றமாக கேட்க,

"ஏன் அம்மா? நான் செய்தது எதாவது தவறா? அவர் செய்தது சரியான விஷயமா? Circus என்பது ஒரு வகையான entertainment. அவைகளை special ஆ சிறுவர்கள் தான் இரசிக்கிறாங்க. அப்படி பட்ட இடத்துல இப்படி ஆட்களை கொலை பண்ணுற மாதிரி magic பண்ணுறது தப்பு தானே. ஏன் இப்படி பட்ட magic அ global magician club ஆல் கூட தடை விதித்து இருக்காங்க. தவறை கண்டா தட்டிக் கேட்கனும் என்று தானே நீங்க எனக்கு சொல்லி தந்து இருக்கீங்க!" என்று kate விளக்கினாள்.

Plantinum hands🦾Where stories live. Discover now