அத்தியாயம்-01

22 6 5
                                    

                 அந்திப்பொழுது

"பஃறுளி யாற்றுடன்
பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும்
கொடுங்கடல் கொள்ள"

(பல நூற்றாண்டுகளுக்கு முன்பு)

• அன்றைய நாள்,உலக உயிர்கள் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும், எப்போதும் ஒளிவீசும் ஆதவனை ,பெரும்பாடுபட்டு கருமேகங்கள் தம்முள் புதைத்துக் கொண்டிருந்தன.

• கூச்சலிட்டு அங்குமிங்கும் பாடித்திரியும் பறவைகள் கூட கிளைகளில் சத்தம் ஏதுமின்றி அமைதியாக அமர்ந்திருந்தன.தொலைவில் வந்து கொண்டிருந்த தேரை,அப்பறவைகள் முன்னரே பார்த்திருக்கக் கூடும்.

• இரண்டு வெண்புரவிகள் பூட்டிய அத்தேரானது,பறந்து விரிந்த பஃறுளி ஆற்றுப்படுகையின் வழியாக போர்க்களத்தின் தெற்கு திசையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

• தென்னாட்டின் வீரர்கள் கூட்டத்தில் அந்த தேர் நுழைந்தது தான் தாமதம்,அதுவரை அழுதறியாத அவ்வீரர்களின் கண்களும்,அந்தியில் மறைந்து கொண்டிருந்த ஆதவனின்  செங்கதிர்களும் திடீரென ஒரே நிறத்தில் காட்சியளித்தது.

• தங்கள் உரிமைக்காக,விடுதலைக்காக வீறுகொண்டு சீறிய புலி,நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் மனத்திலும் இறையென நிறைந்திருந்த அந்த கம்பீர முகம், இப்போது அசைவின்றி தேரில் சாய்ந்து கிடப்பதை அவர்களின் மனம் எப்படி ஏற்றுக்கொள்ளும்!

• அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறை என்னும் இருளை அடியோடு அழித்தொழிக்க ,தனியொருவனாக, சூழ்ந்து நின்ற பகையை சுட்டெரிக்கும் பகலவனாய் உதித்த திருமகனை, துரோகம் என்னும் காரிருள் தன்னுள்ளே புதைத்துக் கொண்டது.

• வெற்றியோடு வருவார் என்று விடுதலை வேட்கையுடன் காத்திருந்த அம்மக்கள் இனி சந்திக்கப் போகும் அவலங்களுக்கெல்லாம் ஆவணமாய் ,அவ்வீரனின் உடல் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்துகொண்டிருக்கிறது.

• "பிரபாகரா, எழுந்து வரமாட்டாயா?" என்ற தாய்மார்களின் ஓலக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்தன.

You've reached the end of published parts.

⏰ Last updated: Jun 05, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

தலைவன்Where stories live. Discover now