சைக்கிள் லைட்

26 1 0
                                    

எண்ணையில் எரியும் இந்த விளக்கை எரிய விட்டு இரவில் சைக்கிளில் பயணித்தவர்கள் வருக. உங்கள் அனுபவங்களை சொல்க...
நாங்கள் நாகைக்கு நள்ளிரவு காட்சி படம் பார்க்க தம்பா அண்ணன் கடையில் வாடகைக்கு சைக்கிள் எடுப்போம்.சினிமாவுக்கு சைக்கிள் எடுத்தால் சினிமா முடிந்து வந்து சைக்கிள் கொடுக்கும் வரை வாடகை 40, 50 பைசாதான்.. தம்பா அண்ணன் விளக்கில் எண்ணை ஊற்றி சைக்கிளிலில் விளக்கும் மாட்டும் இடத்தில் ஸ்ட்ராங்கா மாட்டி விட்டு தருவார். சைக்கிளை ஓட்டி ஜெதப்பா நாங்க விசிலடித்து பாட்டுப் பாடி கொண்டு செல்வோம். படம் முடிந்து ஊருக்கு திரும்புகையில் திடீரென்று விளக்கு அணைந்து விடும். அணைந்தது எங்களுக்கு தெரியாது. அந்த நேரம் பார்த்து இதற்காகவே காத்திருக்கும் போலிஸ் பிடித்து விடுவார்..கண்டிப்பார்.சார் விளக்கு எரிந்தது சார், அணைந்தது எங்களுக்கு தெரியாது சார். தொட்டு பாருங்க சார். தப்புதான் சார், இனி இப்படி வர மாட்டோம் சார் தொட்டு பாருங்க சார் என கெஞ்சுவோம். தொட்டும் பார்ப்பார். சில இரக்கமுள்ள போலிஸ்காரர்கள் சரி சரி மீண்டும் விளக்கை எரிய செய்து ஊர் போய் சேருங்கப்பா என்று விட்டு விடுவார்.சில போலிஸ்காரர்கள் லைட் இல்லாமலா வர்றீங்க எல்லாம் சைக்கிள் நிறுத்திப்புட்டு அப்படி உக்காருங்க, இல்லாட்டி காசு கொடுங்க விட்டுர்றேன் என்பார்கள். அப்போவெல்லாம் சினிமா பார்த்து விட்டு திரும்பும் போது ஒரு பைசா கூட பாக்கெட்டில் இருக்காது. அதனால் மணி கணக்கில் நிற்க வைத்து விட்டு சைக்கிளில் காற்றையும் பிடுங்கி விட்டு அப்படியே தள்ளிக்கிட்டே ஊர் போய் சேருங்கப்பா என விரட்டி விடுவார்கள். ((சைக்கிளுக்கு லைசென்ஸ் இருக்கா என அதையும் பார்ப்பார். அந்தக்காலத்தில் சைக்கிள் லைசென்ஸ் நகராட்சியில் இரண்டு ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும். பச்சை நிற சின்ன தகட்டில் சில எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதை சைக்கிள் முன்னாடி உள்ள பிரேக் கம்பியில் போல்ட்டு போட்டு திருகி மாட்டிப்பட்டிருக்கும்.)) நள்ளிரவில் சைக்கிள் கடையா திறந்திருக்கும்?? தள்ளிக்கிட்டே வருவோம். வாள் முனியார் கோயில் அருகே வரும்போது பயத்தில் உடம்பு நடுங்கும்.வேர்த்துக் கொட்டும், அரண்டவனுக்கு இருண்ட இடமெல்லாம் பேய் என்பார்களே, அதற்கேற்ப ஆந்தைகள் கத்தும் நாய்கள் குரைக்கும், சில நேரம் நாய்கள் துரத்தும், எதிரே பேய் வருவதுபோல் ஏதேதோ கண்ணில் தோன்றும்.தண்ணீர் தாகம் எடுக்கும்,அந்த இடத்தை கடக்கும் வரை என்னென்னமோ செய்யும். எப்படியோ எதாவது பாட்டு பாடி சமாளித்துக் கொண்டு அதிகாலை வீட்டுக்கு வந்தால் வீட்டில் செம வரவேற்பு கிடைக்கும். யப்பப்பா இதில் எங்களுக்கு 1973 வரை வர்ணிக்க முடியாத வதையல்..

நடந்ததை நினைக்கையிலே...Where stories live. Discover now