நாகூர் சங்கு வெட்டி சந்துப் பற்றிய முற்கால தகவல்கள் ....
சங்கு வெட்டி சந்து இது நாகூர் தெற்கு தெரு கெளதியா ஸ்கூலை ஒட்டி தைக்கால் தெருவுக்கு போகும் குறுக்கு வழி..சின்ன சந்து..முற்காலத்தில் நாகூர் நாயகத்தின் வருகைக்கு முன்பு நாவற்காடாய் இருந்த போது இந்த சங்கு வெட்டி சந்தில் பல குடிசைகள் இருந்தன..அங்கு வசித்தோர்கள் சங்குகளை வெட்டி அதை அலங்காரப் பொருளாக்கி விற்பனை செய்து வந்ததால் இப்பெயர் வந்தது ..இடைப்பட்ட காலத்திலும் ஓரீரு வீட்டைத் தவிர மற்ற வீடுகள் குடிசைகள் தான் அதில் பள்ளிக்காக்கா வீடு என்பதும் ,அதை ஒட்டி லட்சம் ஹனிபா நானா வீடு என்பதும் மிக பிரபலம்..தற்போதைய கெளதியா மேல் நிலைப் பள்ளிக்கு எதிர் புறத்தில் பயங்கரமானத் தோற்றத்தில் ஒரு பெரிய பாழடைந்த கிணறு இருந்தது ..வெளிச்சம் இல்லாத அந்தக் காலத்தில் பேய் பயமும் முன்னோர்கள் சொன்ன செய்திகளின் பீதியும் அதிகம்..அதுமட்டுமல்லாமல் சங்கு வெட்டி சந்து என்ற காரணப் பெயரின் அர்த்தம் அக்காலத்தில் மாற்றி பிள்ளைகளுக்கு சொல்லப்பட்டது..அந்த வழியே இரவு வேலையில் போனால் நம்முடைய கழுத்து சங்கை வெட்டி கொலை செய்து விடுவார்கள் என்ற பொய்யான ,பீதியான செய்தி எல்லோர் மத்தியிலும் பரவி இருந்ததால் இரவு நேரத்தில் அந்த வழியே யாருமே போக முடியாத அச்சம் நிலவியது..அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாச்சே,,அதனால் அந்த அச்சப்பாடு 45 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது ..ஆனால் அந்த சந்தில் வாழ்ந்தவர்கள் இதையெல்லாம் பொருட்படுத்தாமல்தான் வாழ்ந்து வந்தனர் ..உண்மையில் அந்த முனையில் இருந்த பாழடைந்த கிணற்றைப் பார்த்து நாங்கள் எல்லாம் பயந்ததுண்டு.. எதிர்புறத்தில் நூர்சா தைக்கால் ..அங்குள்ள மரங்களின் ஆட்டம் பேயாட்டம் மாதிரி இருக்கும்..ஆந்தைகளின் அலரல்,,நாய்களின் குரைப்பு இவைகளே பயத்தை தூண்டி விடும்..இப்படி பற்பல விதமான பயம் அந்தக் காலத்தில் மக்களை ஆட்டிப் படைத்தது..இருண்ட காலம் மாறி வெளிச்ச காலம் தோன்றியது ..பேய்களின் பயம் நீங்கியது..இப்போது மனித பேய்களுக்கு பயப்பட வேண்டி உள்ளது ...அடுத்து மூளேக் குடிச்சான் முடுக்கு பற்றி பதிகிறேன்......
YOU ARE READING
நடந்ததை நினைக்கையிலே...
Short Storyமுன்னோர்கள் சொன்ன , பழைய நூல்களில், படித்த, எனது அனுபவத்தில் அறிந்த, வரலாற்று சம்பவங்கள், நகைச்சுவை நிகழ்வுகள், மற்றும் மறக்க முடியாத நினைவலைகளின் தொகுப்பு. வேட்டையாடுதல், விளையாடுதல்,சினிமா, பாட்டு, கச்சேரி, அந்தக் கால சூழ்நிலைகள், நடைமுறைகள், மறந்...