மருத்துவப் போட்டி

1 0 0
                                    

ஒரு சிறு நகரம்.  அந்த நகரத்தில் "சுஸ்ருதா" என்றொரு மருத்துவர் "குரு" என்ற பெயரில் அலோபதி மருத்துவ மருந்தகம் 💊 💊 ஒன்றை நடத்தி வந்தார்.   அவரது கடைக்கு பக்கத்தில் மரபு வழி அனுபவ அறிவை பெற்ற "போகர்" என்பவர் மூலிகை மருந்தகம் ஒன்றை நடத்தி வந்தார்.

எல்லோரும் அறிந்தது போல் அலோபதி மருந்தகம் நல்ல வருவாய் ஈட்டியது.  அந்த மருந்தகத்திற்கு மருந்து வாங்க வருபவர்களில்          " அகத்தியன்" என்ற சிறுவனும் ஒருவன்.   அவன் அந்த மருந்தகத்தில் மருந்து வாங்கிய பின் அதற்கான பணத்தை 💰 💰 கொடுத்துவிட்டு அதில் மீதமுள்ளை தொகையை அருகிலிருந்த மூலிகை மருந்தகக் கடையில் வைக்கப்பட்டிருந்த "நன்கொடை" என்று எழுதப்பட்டிருந்த உண்டியலில் போட்டுவிட்டு செல்வது வழக்கம்.   அந்த உண்டியல் " போகரின்" கட்டுப்பாட்டில் இருந்த்து.  அவர் அந்த உண்டியலை நீண்ட காலம் திறக்காமலேயே வைத்திருந்தார்.

காலப்போக்கில் மரபு வழி மூலிகை மருத்துவம், மக்களின் உணவு முறை மாற்றத்தின் காரணமாகவும், வாழ்க்கை முறை மாற்றம் காரணமாகவும் ஏற்படும் நோய்களை போக்க தகுதியற்றதாக மாறிவிடவே போகர் தனது மருந்தகக் கடையை மூட வேண்டியதாயிற்று.

அப்போது அவர் தன் வசம் இருந்த " நன்கொடை" உண்டியலை திறந்து பார்த்த போது, அதில் இருந்த பணம் 💰 அவருக்கு ஒரு பசு மாடு வாங்க போதுமானதாக இருந்தது.  ஒரு பசு ஒன்றை விலைக்கு வாங்கி பால் வியாபாரியாக மாறுகிறார். சில வருடங்களில் வங்கியில் கடன் பெற்று ஒரு பண்ணை முதலாளியாகிறார்.  " மாரி" என்ற பெயருடைய  தனது மகளை சித்த மருத்துவப் படிப்பில் (B.S.M.S) சேர்த்து படிக்க வைக்கிறார்.  

இதற்கிடையில்  போகருக்கு அதிக நன்கொடை வழங்கியவர்களில் ஒருவனான அகத்தியன் என்ற சிறுவன் 👦 👦 வளர்ந்து , அலோபதி மருத்துவ படிப்பில் ( M.B.B.S) சேர்கிறான்.

"மாரி" தனது படிப்பை முடித்து ஒரு பல்நோக்கு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியில் சேர்கிறார்.                                  " அகத்தியனும்" தனது படிப்பை முடித்து அலோபதி மருத்துவராக அதே மருத்துவமனையில் மருத்துவராக பணியில் சேர்கிறார்.

நிதி:

*" வாழ்க்கை ஓர் போர்க்களம் ; வாழ்ந்து தான் பார்க்கனும் ; போர்க்களம் மாறலாம் ; போர்கள் தான் மாறுமோ!?*.

* Life is neither a tempest nor a bed full of roses but a comedy of errors*

You've reached the end of published parts.

⏰ Last updated: Aug 06, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

அது ஒரு தொடர்கதைWhere stories live. Discover now