சிறுகதை

55 6 2
                                    

விடியலுக்கான நேரமது ,என் அன்னை வழக்கம் போல் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொண்டு இருந்தாள். நானும் வழக்கம் போல் பல் துலக்கிக்கொண்டு அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன்.

கோலம் போடுவதை ரசிக்கும் எனக்கு அதை கற்றுக்கொள்ள ஆர்வம் வந்ததில்லை. சில விஷயங்களை கற்றுக் கொள்ளாமல் இருப்பது சரி, இல்லையெனில் வேலை பலு நமக்கு வந்து சேர்ந்துவிடும். பல் துலக்கி குளித்து முடித்து விட்டு கல்லூரி கிளம்ப இருந்தேன். என் வீட்டிற்கு அருகாமையில் தான் அவனும். இருவரும் ஒரே பைக்கில் தான் செல்வோம். ஆனால் அன்று அவனுக்கு காய்ச்சல் என்பதால் நான் மட்டும் தனியே ஆட்டோவில் செல்ல ஆயுத்தமானேன்.

"ஏ..இந்தா டி டிபன் பாக்ஸ்,நீ பண்றதே திங்கிறது மட்டும் தான் அதைக்கூட ஒழுங்கா பண்ணாம இருந்தா எப்படி"என்று தாயின் நக்கலுக்கு முறைத்தாள் நந்து என்கிற நந்தினி.

'எதுக்கும் போற வழியில் அவனை பார்த்துட்டு போலாமா' என்ற யோசனையில் ஆட்டோ ஏறுவதற்கு முன்பு அவன் வீட்டிற்குள் நுழைந்தாள்

"டேய் ரவி ,நந்து வந்துருக்கா பாரு " என்றதும் காய்ச்சலில் இருந்தவன் ஏதோ புத்துணர்ச்சி வந்தது போல் எழுந்து அமர்ந்தான்.

"என்னடா ரொம்ப முடியலையா"என்றாள் நந்து.

"ம்ம் ஆமாம் நந்து,நீ இப்போ பக்கத்துல வராத டி உனக்கும் வந்துட போது" என்றான் ரவி.

அவனை கண்டு முறைத்தவள் வேண்டுமென்று ஒரசியபடி பக்கம் வந்து அமர்ந்தாள்.
"வந்தா வரட்டுமே இப்ப என்ன." என்றபடி அவன் தோளை இருக பிடித்தாள்.

"சொல்ற பேச்சு கேட்கவே மாட்டியா டி"

"முடியாது"என்று தலையை அசைத்தாள்.  இக்காட்சியை தூரத்தில் இருந்த ரவியின் அம்மா பார்த்து சிரித்தாள். அலுவலகத்திற்கு தயாராகி கொண்டிருக்கும் தன் கணவனிடம்.

"என்னங்க ரவியும் நந்தினியும் ரொம்ப பொருத்தமானவங்களா இருக்காங்கள? இந்த இங்கிலிஷ்ல மேட் ஃபார் ஈச் அதர்னு சொல்வாங்களே அதுபோல " என்றதும்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Feb 13, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

காதலாகுமோ (சிறுகதை)Where stories live. Discover now