தினமும் கரும்பு ஜூஸ் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்
தினமும் கரும்பு ஜூஸ் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம். இது கோடை காலம் என்பதால் அங்கங்கே கரும்பு சாறு விற்கும் கடைகளும், புதிது புதிதாக முளைக்க தொடங்கியாச்சு. உண்மையில் இந்த கரும்பு சாற்றில் ஏராளமான நன்மைகள் உள்ளன.
கரும்பு சாற்றில் நிறைய நன்மைகள் உள்ளது என்பதை விட அதன் ஒவ்வொரு நன்மைகளும் உங்களுக்கு தெரிந்தால் தான் இதன் உண்மையான மதிப்பு புரியும்.
அந்த வகையில் இங்கே தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன? ஏன் கட்டாயம் இதை அருந்த வேண்டும்? யாரெல்லாம் கண்டிப்பாக அருந்த வேண்டும்? முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் அருந்தலாமா? இது போன்ற பல உண்மைகளை தெரிந்து கொள்ள இறுதிவரை படியுங்கள்.
உடல் வெப்பம்
பொதுவாக கோடைகாலம் என்றாலே அதிக வெப்பத்தால் நீர் இழப்பு ஏற்பட்டு உடல் எளிதில் வறட்சி அடைந்து விடும். அதிலும் நிறைய பேர் அடிக்கடி rest room செல்ல தயங்கி தண்ணீர் அதிகமாகவும் அருந்தமாட்டார்கள்.
இதனால் உடல் சூடு அதிகரித்து நீர்த்தாரை எரிச்சல், நீர் குத்தல், தொற்றுகளால், பிறப்புறுப்பில் அரிப்பு போன்றவை ஏற்படும். இவற்றை சரி செய்யும் தன்மை இந்த கரும்பு சாறுக்கு உண்டு.
அதிலும் இயல்பாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இவர்கள் தினமும் ஒருடம்ளர் கரும்பு சாறு குடித்தால் இந்த பிரச்சனைகளை வராமல் தடுக்கலாம். முக்கியமாக இந்த கரும்பு சாற்றை குடித்த உடனேயே உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதை உணர முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தி
முக்கியமாக இதில் ஆன்டிஆக்ஸிடென்ட், , , மற்றும் பிற எலக்ட்ரோலைட்டுகள் என நிறைய சத்துக்கள் உள்ளதால் இவன் உடலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
YOU ARE READING
healthy foods
Short Storyhealthy https://updatetamil.com/sugarcane-juice-health-benefits-in-tamil/