திகழன் பதட்டத்துடன் வெளியேறி இருக்க, வேகமாக தன் வேலையிடத்தில் அவரசமாக செல்ல வேண்டும் என்று கூறி விட்டு வீட்டிற்கு புறப்பட்டாள். ஒரு கையில் துப்பாக்கியுடன், இன்னொரு கையில் சிவராம் மாமாவின் புகைப்படத்துடன் அமர்ந்து இருந்த தயாளு அத்தையை கண்டவளுக்கு தலை சுற்றியது. அவளை கண்டதும், துப்பாக்கியை மறைத்து வைத்து விட்டு, கணவனின் புகைப்படத்தை மேஜை மேல் வைத்தவர் அவளை அணைத்து அருகில் அமர வைத்தார். சற்று நிதானமாகி மயூரி கேட்டாள், "என்ன நடக்குது அத்தை இங்க, அவர் எதோ சிவப்பு கார் வாங்கிறதா சொல்லிட்டு பரபரப்பா போயிருக்கார், நீங்க கைல துப்பாக்கியோட இருக்கீங்க.. எனக்கு ஏதும் புரியல!" என்று தலையை கைக்கு குடுத்து குனிந்து அமர்ந்தாள். தயாளு அம்மாள் அவளுக்கு தெரியாத தங்கள் கடந்த காலத்தை சொல்ல தொடங்கினார்.
கதிரின் இருப்பிடம் நோக்கி வந்து கொண்டிருந்த திகழன் தங்கள் ஐவரின் நட்பு பற்றி எண்ணி கொண்டு வந்தான்.
வாங்க நம்ம கொஞ்சம் பின் நோக்கி நகர்வோம்.
அம்மா அப்பா தங்கை என்று அழகான கூடு சிவராம் அவரது வீடு. கையில் எதோ ஒரு புத்தகத்தை வைத்து கொண்டிருந்த மகனை வந்து சாப்பிடுமாறு கூவல் விடுத்தது கொண்டிருந்தார் சிவராமின் அம்மா, கார்த்திகா. "டேய், நானும் கிளம்பனும் டா, எனக்கு முதல் வகுப்பு 12 வது வகுப்பு. தயவு செஞ்சு சீக்ரம் சாப்பிடு. நாங்க கிளம்புனா பிறகு நீ சாப்பிட மாட்ட. இப்படித்தான் அங்க கல்லுரியில் இருக்க சாப்பிடுற இடத்துல படுத்துறியா?" என்றார்.இந்த மயூரி இன்னும் நாட்டிய பயிற்சி முடிச்சு வரல, கூப்பிட போன உங்க அப்பா வையும் காணல. படுத்துறீங்க மூணு பெரும்" என்று அவர் புலம்ப.
"வந்துட்டோம் அம்மா," என்று சத்தமாய் கத்தி கொண்டே வந்தாள் தமயந்தி. "அவளை கண்டதும் அள்ளி அனைத்து கொண்டவர், "சீக்கிரம் சாப்பிடு, அப்பா எங்க?" என்றார்.
கையில் தட்டை வாங்கி கொண்டு, "அப்பாக்கு இன்னைக்கு காலைல சீக்கிரம் போகணுமாம், வந்ததும் தயாராக உள்ள போய்ட்டார்" என்று உள்ளறையை காட்டினாள் தமயந்தி.
YOU ARE READING
நடனமாடும் புதிர்
Mystery / Thrillerஒரு பக்கம்.. இயல்பாக காதலில் விழும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி. ஆனால் அவர்களுக்கு பின்னால் மறைந்து நிற்கின்றது அவர்களது கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள். அந்த கசப்பு காதலின் தித்திப்பை கெடுக்குமா, கூட்டுமா? *****************************...