1.அத்தியாயம்

163 4 2
                                    

சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கம் குறைந்த மாலை வேளை அது. ஒருபுறம் நீலமும் அதன் தொடர்ச்சியில் நிலா வானத்தில் திருநீறு கீற்றாக தோன்ற ஆரம்பித்திருக்க, மறுபுறம் சூரியன் தனது ஆரஞ்சு வண்ணத்தை தன்னை நோக்கி இழுத்துக்கொண்டிருந்தது. இவ்வாறாக திரும்பும் திசைக்கு மாறுபடும் வானத்தை பார்த்திருந்தவன், தான் பயணிக்கும் காரை நிறுத்த கூறினான்.

"அண்ணா! நான் இங்கயே இறங்கிக்கிறேன்.", என கூறி கேபிற்கு பணம் தந்து தனது ஒரு டிராவல் பேகை தோளில் மாட்டியவன், அணிந்திருந்த ஷூவை அகற்றி இடக்கையில் பிடித்துக்கொண்டு, வெற்று காலை மணலில் புதைத்து நடந்தான்.

கடலை நெருங்கியவன் தனது பேகை கழற்றி வைத்து, அலையருகே நடக்க ஆரம்பிக்க, அவனது அலைப்பேசி அடித்தது.

"ஹலோ அனு!", என இயல்பிலே கம்பீரமான அவனது குரல், தற்போது தன்மையும் பாசமுமாக ஒலித்தது.

"அண்ணா ரீச் ஆகிட்டியா இல்லையா? எங்க இருக்க?", என படபடவென கேட்டாள் தங்கை அனு.

"ஊருக்கு வந்துட்டேன்டா. பீச்ல இருக்கேன்!", என்றதும், "பீச்சா? அங்க என்ன மணல எண்ணிட்டிருக்கியா?", என கோபமாக கேட்டாள்.

"ஹா ஹா! ஏதோ தோணுச்சு... அதனால இறங்கிட்டேன். கொஞ்ச நேரத்தில் வரேன்.", என்றதும் மறுபுறம் அழைப்பு துண்டிக்கப்பட்டது ஆதங்கமாக.

கடல் மணலில் ஆழமாக தடம் பதித்து நின்றபடியே, துள்ளி வரும் அலைகளை வெறித்துக் கொண்டிருந்தவன் முகிலன் எனும் கார்முகிலன். ஐந்தரையடி உயரத்தில், கட்டுக் கோப்பான உடலுடன், இருக்கும் சாக்லேட் நிறத்தழகன்.

கடல் காற்று அவனது கேசத்தை கொஞ்சி விளையாட, ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தவன், மறுகையால் ஸ்டைலாக தலையை கோதினான்.

மீண்டும் பாக்கெட்டில் இருந்த அலைப்பேசி ஒலிக்க, அதனை எடுக்க மனமின்றி எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ, "டேய் போன் பண்ணா எடுக்க மாட்டியா?", அவன் நண்பன் ரகுவின் குரல் அருகில் கேட்கவும், அவனை நோக்கினான்.

[On Hold] 💕கேளாமல் வந்தாயே...💕Where stories live. Discover now