2.அத்தியாயம்

41 4 0
                                    

சூரியன் தன் பணியை செய்ய வந்திருக்க, இருள் வானம் மங்கி, காலை புலர்ந்தது. வெள்ளை திரைச்சீலை தாண்டி, சூரிய ஒளி அறையில் தெறிக்க, அதன் ஒளியில் விழிகள் கூசிட, கண்களை சுருக்கியபடியே விழித்தான் கார்முகிலன்.

எழுந்தவன் கண்கள் ஒரு நொடி அறையை நோட்டம் விட்டது. இரு வருடங்கள் முன் அவனது அறை எப்படி இருந்ததோ இப்போதும் அப்படியே இருக்கிறது.

அவன் விரல்கள் தழுவிய கிரிக்கெட் பேட், அவன் போட்டிகளில் வென்ற போது கழுத்தில் பெருமையாக அணிந்திருந்த தங்கப் பதக்கங்கள், சுவரில் ஆங்காங்கே சில இடங்களில் புகைப்படங்கள் நினைவுகளை சுமந்துக் கொண்டு ப்ரேம் போட்டு மாட்டியிருந்தது. பழைய நினைவுகள் எல்லாம் ஒரு நொடி கண்முன் தோன்றி மறைந்தது. அதனை ஒதுக்கிவிட்டு, குளித்து தயாராகி தனதறையில் இருந்து வெளியே வந்தவனை, காபியோடு வரவேற்றாள் அனுஜா.

அவன் எழுந்து வந்ததை ராஜன் கவனித்து புன்னகைத்திட, பதிலுக்கு புன்னகைத்தவன் அவரோடு அமர்ந்துக்கொண்டான். அவனது தொழில் பற்றியெல்லாம் ஏற்கனவே ராஜனிடம் அலைப்பேசி மூலமாக தெரிவித்திருந்தமையால் பேச்சின் தலைப்பு அதுவாக அமைய, சில நிமிடங்களில் அர்ஜுனும் இணைந்துக்கொண்டான்.

கார்முகிலன் தனது நட்புகளோடு சொந்தமாக விளம்பர கம்பனி ஒன்றை நடத்தி வருகிறான். மாபெரும் உயரம் தொடவில்லை என்றாலும், அவ்வூரில் அவர்களுக்கென ஓர் தனியிடம் உண்டு. கச்சிதமாகவும், தரமாகவும் வேலை நடத்திக்கொடுப்பதால் மக்கள் மத்தியில் பரிச்சயமாகியிருந்தனர்.

"அண்ணா... வா சாப்பிடலாம்", என்று அவர்களது பேச்சிற்கு காற்புள்ளி வைத்து, கார்முகிலனை அழைத்து சாப்பிட அமர வைத்தவள், "நானே செஞ்சேன் தெரியுமா?", என்று பெருமையாக அவள் கூற, போலியான பயத்துடன், "என்ன விட்ருமா தாயே!", என்றவன் கெஞ்ச, அவள் முறைக்கவும், சிரித்தான்.

"எல்லாரும் சாப்டாச்சா?", என்று முகிலன் கேட்க, "ம்ம் அதெல்லாம். நீதான் சரியான கும்பகர்ணன். மணிய பாரு என்னன்னு", என்று திட்டியபடியே சூடான பொங்கலை நெய்யால் நனைத்தவள், தொட்டுக்கொள்ள சட்னியும் பரிமாறினாள்.

[On Hold] 💕கேளாமல் வந்தாயே...💕Donde viven las historias. Descúbrelo ahora