அவள் ,
தாயாக , தாரமாக , தங்கையாக , தமக்கையாக, தல்லாடும் கிழவியாக , தவழும் மழலையாக பல இடங்களில் பல முகங்களிள் போற்றப்பட வேண்டியவள் , தரிகெட்டவள், தருத்திரம் என்றெல்லாம் தாழ்த்தி தூற்ற படுவது ஏன்?????அவள்,
உடைகள் சரி இல்லை என்று சொல்லும் சமூகம் பார்ப்பவர்கள் உள்ளத்தை சரி செய்ய சொல்லாதது ஏன்?????அவள்,
மாதவிடாயின் வலியை விட இரு மடங்கு அதிகமான மன வலிகளை சுமப்பது ஏன்?????அவள்,
தன் உடைய கனவுகள், காதல் அனைத்தையும் தியாகம் செய்யும் நிலைக்கு தள்ள படுவது ஏன்?????அவள்,
உண்மையை சொல்லும் பல நேரங்களில் ஊமையாக்க படுவது ஏன்?????அவள்,
தன்னை சார்ந்தவர்களின் மகிழ்ச்சிகாக தன்னையே மறப்பது ஏன்?????அவள்,
மற்றவரின் தவறுக்கு குற்றவாளி ஆக தலை குனிவது ஏன்?????அவள்,
பல நேரங்களில் அன்பை தந்து அவமானங்களை சுமப்பது ஏன்?????அவள்,
கண்ணீரை பார்க்கும் இந்த உலகம் அதன் பின் மறைத்து வைக்கப் பட்ட காயங்களை பார்க்க தவறியது ஏன்?????அவள் ,
பிரசவத்தின் வலியை சுமக்கும் போதும் பலவீனமானவளாக கருதப்படுவது ஏன்?????அவள்,
கனவுகளை நோக்கி நகர்ந்து செல்லும் போது கட்ட படுவது ஏன்?????அவள்,
சம உரிமை என்று சொல்லும் போதும் சமமாக பார்க்க படாதது ஏன்?????அவள்,
செய்ய நினைக்கும், சாதிக்க நினைக்கும் நேரங்களில் உன்னால் முடியுமா என கேள்விக்குறி ஆக்க படுவது ஏன்?????இந்த கேள்விகள் உங்களுக்கு காரணம் இல்லாதது போல தெரிகிறது என்றால்....
ஒரு ஆண் கொலை, கொல்லை , கற்பழிப்பு அனைத்தும் செய்தாலும் ஒரு சிறு பிழை செய்யும் போது "இவள் எல்லாம் ஒரு பெண்ணா? " என தூற்ற படுகிறாள்.