உறவுகள்.
எதிர்பார்ப்பை ஏமாற்றமாக்குகிறது.
மாசற்ற அன்பை
நான் கொடுக்கிறேன்.அதை புரிந்துகொள்ளவோ அல்லது புரிந்துகொண்டு மதிக்கவோ அவர்களுக்கு தெரியவில்லை.
எதிர்பார்ப்பதால் எனக்கு ஏமாற்றம்.
ஒரு கட்டத்தில் எதிர்பார்ப்பதையே விட்டுவிட்டேன்.
வந்தால் வரவேற்போம்.
பேசினால் பேசுவோம்.
என வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன்.ஒரு பக்கம் திருப்தியாக இருந்தாலும்
மறுபக்கம் யாருமில்லா
வெற்று நிலையை அடைந்தேன்.வேலை பளுவில் பல நேரம் மறந்திருந்தாலும் சில நேரம் மனதிற்குள் ஓடியவண்ணம் இருந்தது.
வாழ்க்கையில் உறவுகள் இல்லையென்றால்
வெறுமைதானா.ஆம்
தாங்கி கொள்ள தாய்
ஏந்தி கொள்ள தந்தை
தூக்கிவிட அண்ணண்
தோளணைக்க அக்கா
சீண்டி விளையாட தம்பி
ஓடி திரிய ஒரு தங்கை
கைபிடிக்க பெரியப்பா
கட்டி அணைக்க பெரியம்மா
அரவணைக்க மாமா
அன்பு காட்ட அத்தை
ஆதரவு தர சித்தப்பா
அள்ளி அணைக்க சித்தி
சிந்தனையை தர தாத்தா
பாசத்தை கொடுக்க பாட்டி
கை கோர்க்க சகலை
மகளாய் மச்சினிச்சி
நட்பாய் அண்ணி
உறுதுணையாய் மச்சினர்
சகோதரியாய் நாத்தனார்
தோழியாய் ஓரகத்தி
தோழராய் மூத்தார்
எல்லமாய் நம் இணை
பாசத்தை கொடுக்க மகனும் மகளும்
ஆசையாய் கொஞ்ச பேரனும் பேத்தியும்
ஓடி விளையாட கொள்ளுப்பேரனும் பேத்தியும்
பாடி மகிழ எள்ளுப்பேரனும் பேத்தியும்
மருமகள் மருமகன்
அண்ணன் மகன் மகள்
தம்பி மகள் மகன்
அக்கா மகன் மகள்
தங்கை மகள் மகன்
மூத்தார் மகன் மகள்
மச்சினர் மகள் மகன்
நாத்தனார் மகன் மகள்அப்பப்பா
எத்தனை உறவுகள் நம்மிடம்
இத்தனையையும் சரிசமமாக தாங்க தெரியாமல்தான் தவிக்கிறோமா.அல்லது இவர்கள் நம்மை சரிசமமாக பார்க்க தவறுகிறார்களா
சரி
சமம்.
உறவில்
என்ன
சரி
சமம்கூடும் இடங்களில்
கொண்டாடுவோம் உறவைமுடிந்தால் உதவுவோம்
முடியாவிட்டால் முயலுவோம்
பேசி சிரிப்போம்
கூடி களிப்போம்
புறம் சொல்ல வேண்டாம்
முகம் பார்த்து பேசுவோம்
வம்பு வேண்டாம்
முடிந்தால்
அன்பு செய்வோம்
முடியாவிட்டால்
மவுனம் காப்போம்
உறவுகளிடையே சரிசமம் வேண்டாம்
உணர்தல் மட்டும் போதும்
உறவிற்கு.
எனக்கு நீ முக்கியம்
என்பதற்கு பதில்நீயும் முக்கியம் என
உறவை
உணர வையுங்கள்உறவிற்கு
அது போதும்________________
கனிவுடன்
கஸ்தூரி ஆண்டாள்