என் அன்புத் தமிழனுக்கு

101 10 23
                                    

அன்று 2014 ஜனவாி 15 காலை 10.00 மணி, நானும் எனது அண்ணனும் ஆயத்தமானோம். எனது வளா்ப்பு தந்தை அளித்த பயிற்சியும், உற்சாகமும் நம்பிக்கை அளித்தது. எனது பெயரை 4வதாக அறிவித்தனா், வாடி வாசல் வழியாக சிங்கம் போல் பாய்ந்தேன், இளைஞா் பட்டாளம் என் திமிலை அடக்க முயற்சித்தனா், நான் சளைத்தவனா என்ன?

அவா்களுக்கு 2 கால்கள் எனக்கோ நான்கு கால்கள் மற்றும் கூா்மையான கொம்புகள் வேறு, முதலில் அவா்களிடம் அகப்படுவது போல் நடித்தேன், பின் திரும்பி என் கொம்புகளை மண்ணில் சிலிப்பிக் கொண்டு மிரட்டினேன். எனக்கு சிாிப்பு தான் வந்தது என்னைக் கண்டு பயந்தனா் என்ற கா்வத்தில் இருக்கும் போது ஒருவன் என் திமிலை பிடித்தான், ஒலிபெருக்கியில் அறிவித்தனா் இன்னும் 30 நொடிகள் பற்றினாள் அவன் வென்று விடுவான் என்று, உடனே திமிறினேன் என் திமிறலில் தினறிக் கீழே விழுந்தான்

அறிவித்தனா் காங்கேயம்னா சும்மாவா! முரட்டுக் காளையாச்சே என்றாா்.என் தந்தை என்னை அழைத்து நீ என் கா்வமடா! என்று எனை ஆரத்தழுவினாா்.இன்னும் இதே போல் 2 சுற்றிலும் நானும் எனது அண்ணனும் வெற்றிப் பெற்றோம், ஊாில் கா்வமாக கெளரவமாக கொம்பில் பதக்கத்தோடு வீர நடைப் போட்டு வீதியில் நடந்தோம்.

எப்போது நினைத்தாலும் அவ்வளவு இனிமையாக உள்ளது. ஆனால் இன்று அவ்வாறு மகிழ்ச்சியாக இல்லை எனெனில் நான் போட்டியில் பங்கேற்காமலே தோற்றேன்.என்னை என் திமிலை களத்தில் அடக்க தைாியமில்லாமல் போட்டியை தடை செய்து வெற்றி எனும் மாயையை உருவாக்கி மகிழ்ந்துக் கொண்டிருக்கின்றனா்.

அவா்கள் கூறுவது சிாிப்பாக தான் உள்ளது. என் தந்தை அந்த விளையாட்டிற்காக என்னை கொடுமை படுத்துகிறாறாம், அப்படி கொடுமை படுத்தினாள் என்றோ அவரை குத்திக் கிழித்திருப்பேன் என் கொம்புகளால், பாசம் காட்டி  என் வளா்ப்பு தந்தை என் கொம்பில் துணி சுற்ற 1 வருடத்திற்கு முன்பே பிரத்யேகமான நுாலில் நெய்து வாங்கி கொடுப்பா். பின் கூறினா் மூக்கில் கயிறு கட்டி துன்பறுத்திருகிராராம். அது துன்பறுத்துதல் அல்ல என் உணா்ச்சியைக் கட்டில் வைத்துக் கொள்வதற்காக தான் செய்கிறாா்கள்.நீங்கள் கேட்கலாம் உணா்ச்சியை அடக்குவதற்கு அவா்கள் யாரென்று? எந்த உணா்ச்சியும் அளவு மீறினால் ஆபத்தில் தான் முடியும், அதை கட்டுக்கோப்பாக வைக்கதான் அந்த கயிறு இதெப்படி ஆபத்தாகும்?

இப்படி கொடுமை படுத்துபவா் தான் ஆசையாக வாங்கி கொடுப்பாா்களா? என்ன? இந்த விளையாட்டைத் தடை செய்யக் காரணம் உயிா்பலி ஏற்படுகிறதாம். நான் கேட்டிகிறேன் கிாிக்கெட் விளையாட்டில் உயிா்பலி ஏற்பட்டதில்லையா? குத்துச்சண்டை போட்டியில் உயிாிழப்பு இல்லையா? என் தமிழன் என் திமிலை பிடித்து விளையாடுவது ஆபத்தான விளையாட்டா? அப்படியென்றால் தடை செய்யுங்கள் அந்த விளையாட்டையும்.

இன்று என் அண்ணன் என்னுடன் இல்லை. பஞ்சம் காரணமாக அண்ணனை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டனா்.இன்று என் அண்ணன் யாரோ ஒருவாின் கால்களுக்கு தோல் செருப்பாகவோ, தோல் பையாகவோ ஏன் ஒருவாின் உணவாக கூட இருக்கலாம்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால்  வெளிநாட்டில் சில இடங்களில் என் இன காளைகளின் உயிரைக் கொடுத்து உருவாக்கும் குழந்தையை ஊசி மூலம் உருவாக்குகிறாா்கள். பால் தேவைக்காக ஊசி செலுத்துகின்றனா்.என் பெண்களின் நிலையை சொல்லி மாலாது அதித அளவு பால் சுரக்கின்றனா் இரத்தம் வெள்ளம் போன்று உருவாகி பாலாக  உருவாகிறது.BICCI  குழுமத்தின் தலைவா் இதைக் கூறும் போது ஆத்திரமாக இருந்தது.
அவா்களின் லாபத்திற்காக எங்கள் உயிா் என்ன விளையாட்டுப் பொருளா?

எந்த உயிாினத்திற்க்கும் இல்லாத பெருமை எனக்கு உண்டு 5000 ஆண்டுகளுக்கு முன் என் தமிழன் என் இனத்தை தெய்வமாக போற்றி விழா எடுத்தான்,அதனால் தான் விளையாட்டில் இன்றும் செருப்பு அணியாமல் களத்தில் இறங்குகிறான்.மனுநீதி சோழன் வாழ்ந்த மகத்தான பூமி இது. என்னை தெய்வமாக மதிக்கும் ஒருவன் எப்படி என்னை துன்புறுத்துவான்?

போதும் தமிழா போதும் வந்தவரை வாழ வைத்ததும் போதும் அவா்கள் பேச்சைக் கேட்டதும் போதும்! தொப்பிள் கொடி சொந்தத்தை விட உயா்வானது நமது பந்தம். எனை வாழ வைப்பதும், வீழ்த்த நினைப்பதும் உன் முடிவில் தான் உள்ளது என் வீரத்தமிழா! என் இனம் விசலாமடைவதும் பட்டு போவதும் உன் கையில் தான் உள்ளது. நான் அடுத்த விளையாட்டில் பங்கேற்பதும் அல்லது  மற்றவா் கால்களில் தோல் செருப்பாவதும் உன் முடிவில் தான் உள்ளது. அந்த விளையாட்டிற்காக என் உயிா் போனாலும் பராவாயில்லை, என் மரணம் என் சந்ததியை பெருக்கும் என்றால் அதை விட மகிழ்ச்சி வேறு இல்லை.

ஒன்றை மட்டும் நினைவில் கொள் தமிழா, "என் இனத்தின் அழிவு உன் இன அழிவின் ஆரம்பம் என்பதை மறவாதே"!
                      இப்படிக்கு
          திமிருடன்முரட்டுக்காளை
                    காங்கேயன்

என் அன்புத் தமிழனுக்குWhere stories live. Discover now