அவள் அழகை பாட
ஒரு மொழியில்லையே
அளந்து பார்க்க பல
விழி இல்லையே
என்னை இருந்தப்போதும்
அவள் எனதில்லையே
மறந்துபோ என் மனமே....தன் ஹெட்செட்டில் ஒலிக்கும் பாடலின் வரிகளோடு ஒனறியவனாய் தனது ஜாக்கிஙை தொடர்ந்தான் விஷ்வா.
பழைய நினைவுகளில் மூழ்கியவனை காதில் மாட்டிருந்த ஹெட்செடை கலட்டிவிட்டு சுயநினைவுக்கு யாரோ மீட்கவும் எரிச்சலோடு திரும்ப அங்கே ஹரிணியை கண்டதும் எரிச்சல் கோபமாக மாறியது.
"ஹாய் விஷ்வா..."
என்று புன்னகையோடு கையசைக்க"ம்ச் உனக்கு வேற வேலையே இல்லையா..."
என்று கடுப்படித்தவன் பதிலிற்காக நிற்காமல் முன்னே நடக்க"ம்ம் இருக்கு..பட் முக்கியமான வேலை இது தானே..."
என்று கூறியபடி அவனுடன் நடக்க அவன் அவளை சட்டை செய்யாமல் போகவும் அவனை அவள் வழிமறித்தாள்."ஏய்.. உனக்கு என்ன வேணும்..."
என்று கோபமாக கேட்கவும்"நீ தான் வேணும்.. கல்யாணம் பண்ணிக்கிறியா..."
என்று மெட்ராஸ் கேத்ரின் போல் கூற அவளை முறைத்தவன்"இங்க பாரு என் ப்ரண்டோட தங்கச்சி ங்குறதாள பொறுமையா இருக்கேன்..என்னை பேச வைக்காத..."
என்று எச்சரிக்க"நானும் என் அண்ணனோட ப்ரண்டுங்குறதால மரியாதையா பேசிட்டு இருக்கேன்..."
என்று அவனுக்கு சலைத்தவள் இல்லை என்பதுபோல் பதிலளிக்க"ஏய்..உன்ன...இரு.. போனால் போகுதுனு சும்மா விட்டது தப்பா போச்சு.. சிவாட்ட சொன்னால் தான் நீ சரிப்பட்டு வருவ..."
என்று போனை எடுக்க"ம்ம் சொல்லுங்க சொல்லுங்க... எப்படியும் அண்ணாக்கு தெரிந்து தானே ஆக வேண்டும்..."
என்று அவள் கேஷ்வலாக சொல்லவும் அவனுக்கு கோபம் அதிகரித்தும் அவளை திட்ட நாயெழவில்லை.இன்றும் சரி என்றும் சரி அவளை நோகடிக்கும் படி பேச அவனால் முடியவில்லை.அது ஏன் என்றும் அவனுக்கும் புரியவில்லை.