பாவியர் சபைதனிலே - சிறுகதை

602 42 44
                                    

அது ஒரு குலை நடுங்கும் குளிர். நள்ளிரவு ஒரு மணி இருக்கும் மணி துளிகள் கடக்க மறுத்த நேரமது. நால்வர் மூச்சிறைக்க துரத்தி கொண்டிருந்தனர். தாயும் மகளும் தலைதெறிக்க ஒடிய அந்த சாலையில் யாருமே இல்லை. இருவருக்கும் ஒடமுடியவில்லை பாதங்கள் கவ்வியது வெறுங்காலோடு ஓடுகிறார்கள் அல்லவா. துரத்திய அந்த நால்வரிடமே அகப்பட்டு கொண்டார்கள். இருவருக்கும் பயம் தொற்றி கொண்டது என்ன நடக்க போகிறதோ என நிமிடங்கள் கூட பரபரத்தன. இருவர் இருவராக பிரிந்து இருவரை பிரித்தனர். இருவரும் திமிறி சலசலத்தனர் அவர்களின் சலசலப்பை அந்த நால்வரால் சகிக்க முடியவில்லை சகிப்பின்மை காரணமாக இருக்கலாம்.

கொடி கம்பத்தின் கீழே அண்டைக்கு வைக்கப்பட்ட  கருங்கல்லை எடுத்து தாயின் தலையில் ஓங்கி வைத்தான். சிறிது நேரத்தில் கருங்கல் சிவப்பானது. மெள்ள மகளை நோக்கி வந்தான், தலையை பிடித்தவாரே மயங்கும் நிலையில் அலறினாள் தாய் "யாஜ்னா பாக் பாக்" என்று. முடியவில்லை என் செய்வாள் நான்கு திசைகளிலும் நரிகள் சூழ்ந்து கொண்டன. அனுதினமும் பார்த்து பழகியது என்றாலும் அந்த கபரி பசாரில் அவளுக்கு திக்கும் தெரியவில்லை திசையும் தெரியவில்லை இருந்தும் ஓட முயற்ச்சித்தாள், ம்ஹும்! முடியவில்லை. கருங்கல்லை முதுகிலே எறிந்தான் அடுத்த நிமிடமே சுருண்டு விழுந்தாள் மேலும் பூட்டிய கதவின் மேற்கூறையில் இருந்த மூன்றடி நீள இரும்பு கம்பியை எடுத்து அவள் பின்னந்தலையை பழுக்க வைத்தான் இன்னொரு பாதகன். இப்போது சர்வமும்  அடங்கியது மெள்ள அவள் மயங்க முனங்கல் சத்தம் மட்டுமே கேட்டது. அவள் ஆடைகளை மெதுவாக களைந்தார்கள் கயவர்கள், இன்னும் மயங்கி தான் கிடக்கிறாள்.

அங்கு ஒரே பேய் சிரிப்பொலி அந்த சிரிப்பொலியின் சத்தத்தை கேட்டு வண்டுகள் கூட தங்கள் ரீங்காரத்தை நிறுத்தி கொண்டன, அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்த நாய்களும் தங்கள் சப்த நாடியையும் அடக்கி கொண்டு தங்கள் இருப்பிடத்தில் ஒடுங்கி கொண்டன. சிறிது நேரம் நீள் அமைதி. தவளை தன் இணையை மயக்கும் சத்தம் மட்டும் அங்கு கேட்டு கொண்டிருந்தது அவள் முனங்கலும் தான். மயக்கம் மெள்ள தெளிந்தது போலும் வலியின் தாக்கத்தை தாங்க முடியாமல் ஆஆஆஆவென்று அலறினாள். கண்ணீர் அவள் காதோரம் வழிந்த உதிரத்துடன் கலந்தது. குளிரிடமிருந்து அடைகாத்த கடைசி ஆடையையும் உருவி எடுத்துவிட்டார்கள் பாவிகள். அவள் வாழ்க்கையின் முதல் அழுகையின் கோலத்தில் தான் இப்போது அவள் அழுகிறாள். அவள் மென்கைகள் அந்த பாவிகளின் கால்களின் கீழ் இருப்பதையே அப்போது தான் உணர்ந்தாள் என்பதே அவள் சுயநினைவின் வீரியம். ஆவென்று கதற கதற கண்ணீரும்; இரத்தமும்; வியர்வையும் அவளை நனைத்து அந்த குளிரில் அவள் மேனியை சிலிர்க்க செய்தது. அந்த ரணகளதத்திலும் வானத்தையே பார்த்து கொண்டிருந்தாள். எங்கு நமக்கு கண்ணன் துகில் ஏதும் அனுப்புவானா என்று. அதற்கெல்லாம் அவனுக்கு நேரமுமில்லை மனமுமில்லை என்று அந்த பாதகத்திக்கு எப்படி சொல்வது. அப்படி அனுப்புவானேயானல் இந்த பாரதமே துகிலால் நிறைந்திருக்காது.

பாவியர் சபைதனிலேWhere stories live. Discover now