சென்னை பயணம்

3.8K 300 47
                                    

அடர்ந்த மரங்கள் எண்ணில் அடங்காமல் சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்திருக்க பச்சை பசேல் என்று கண்ணை கவர்ந்திழுக்கும் நிறத்தில் சிரித்து குலுங்கும் வயல் வெளிகளும் ரம்மியமாய் தோன்றி மனதை சுண்டி இழுத்தாலும் அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் மிகவும் துரிதமாக மஹாவை இந்த இடத்தில இருந்து பத்திரமாக கூட்டி சென்றுவிட வேண்டும் என்பதில் மட்டும் குறியாக செயல்பட்டான்.

மஹா வழி சொல்ல நம்ம ஹீரோ ஷக்தி அந்த ஊரில் ஆங்காங்கே முளைத்திருந்த வீடுகளை தாணடி ஒரு பெரிய வீட்டின் முன் காரை நிறுத்தினான் " இந்த வீடு தானா?"

"ஆமாம்!" என்று குனிந்தவாறே தலை அசைத்தாள்.

"சரி நா இங்கேயே வெயிட் பண்றேன் நீ போய் சீக்கிரமா பார்த்துட்டு சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டு வந்துடு " என்று தன் மொபைலை எடுத்து பார்வையிட ஆரம்பித்தான்.

சிறிது நேரம் தன் வேலையில் மூழ்கி இருந்தவன் எதேச்சையாக திரும்ப, அவள் உள்ளே போகாமல் அங்கேயே நின்றுகொண்டிருப்பதை பார்த்துவிட்டு

"என்ன? போயிட்டு வான்னு சொன்ன அப்புறமும் இங்கயே ஏன் இவ்ளோ நேரம் நின்னுட்டு இருக்க?" என்றான் சிறிது வாஞ்சையுடன்....

எப்படி சொல்வது என பயந்து கொண்டிருந்தவள் தன கணவனின் கனிவான பேச்சால் கொஞ்சமே கொஞ்சம் பயம் நீங்க.....
"இல்ல.... உள்ள இருக்கறது எங்க பாட்டி தான்.... எப்பவும் எனக்கு ஆதரவா இருக்குறது அவங்க மட்டும் தான்.... அதான்...." என்று மென்று விழுங்கினாள்

"அப்படியா! சரி மஹா நீ போய் பாட்டிகிட்ட நடந்ததை சொல்லி  நாங்க இப்ப கிளம்பியே ஆகணும் பிரச்சனை எல்லாம் சரி ஆகட்டும் நாங்க கண்டிப்பா வரோம்னு சொல்லிட்டு வா! நா இங்கயே வெயிட் பண்றேன். சரியா?" என்றான் கரிசனத்துடன்.

அவளுக்குள் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியதுடன்
"தப்பா நினைக்கலேன்னா நீங்களும உள்ள வர முடியுமா ? பாட்டி உங்கள பார்த்தா ரொம்ப சந்தோஷ படுவாங்க " என்று பயந்தபடி அவனை பார்க்காமலே கேட்டாள்.

நெருங்க சொல்லுதடி உன்னிடம் | Nerunga solluthadi unnidam (completed)Where stories live. Discover now