முற்று...

167 31 9
                                    

நான் சொன்ன மாதிரியே அன்னைக்கி எல்லா பேப்பர், நியூஸ்லயும் நேத்து நடந்த மீட்டிங் அப்பறம் அந்த owners மேல போட்ட புது கேஸ் பத்தி செய்தி தான் முக்கிய செய்தியா வந்துருந்துச்சு.

என்னோட அடுத்தகட்ட விசாரணை அந்த Contractors association கிட்ட. கட்டாயமா இது அந்த association members பண்ணியிருக்க மாட்டாங்கன்னு தோனுச்சு. But எனக்கு வேற வழி தெரியல. இந்த ஒரு வழி தான் இருக்கு. இந்த விசாரணையில ஏதாச்சும் தெரியவரும்ன்னு தான் இந்த பக்கம் போறேன்.

ஒருவேளை இந்த விசாரணையில எந்த விதமான clueம் கிடைக்கலன்னா... என்ன செய்றது??? தெரியல... எந்த ஐடியாவும் இல்ல...

கையில காபி கப்போட அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டு இருந்தேன்.

Calling bell சத்தம் கேட்டுச்சு. போய் பாத்தேன். ஒரு பெரிய கூட்டமே வாசல்ல நின்டுச்சு.

"ஜெகன் சார்...", என்றார் ஒருத்தர் தயங்கி தயங்கி.

"ஆமா... நான் தான்... நீங்க...", என்றேன்.

"சார்... நாங்க contractors association members...", என்றனர்.

"உள்ள வாங்க...", என்றேன்.

உள்ள வந்து ஒரு bouquet குடுத்தாங்க.

"எதுக்கு இது...", என்றேன்.

"இல்ல சார்... அந்த building owners மேல கேஸ் போட்டதுக்கு தான் சார்... அந்த 8 பேருக்கு நியாயம் கிடைக்காம போயிருச்சுன்னு நாங்க ரொம்ப கவலையா இருந்தோம். அந்த கடவுள் உங்க ரூபத்துல வந்து நல்லது பண்ணீட்டாரு... ரொம்ப நன்றி சார்...", என்றார் அந்த Contractor association president.

இப்போ எனக்கு சந்தேகமே இல்லாம புரிஞ்சுருச்சு. இந்த சம்பவத்துக்கு இந்த associationக்கும் துளி கூட சம்பந்தம் இல்ல.

"அந்த 8 பேர் பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா???", என்றேன்.

"அந்த பசங்களுக்கு ஒரு 25 - 27 வயசு தான் இருக்கும் சார். எல்லாரும் பீஹார் பசங்க. அவங்களுக்கு சொந்தம்ன்னு சொல்லிக்க யாரும் இல்ல. அவங்க பீஹார விட்டு வந்து 10 வருஷத்துக்கு மேல ஆகுது சார். ஒரு 5 - 6 வருஷமா எங்ககிட்ட தான் வேலை பாக்குறாங்க. நல்ல பசங்க. எல்லார் கூடயும் நல்ல பழகுவாங்க", என்றார் President.

"இந்த buildings இடிஞ்சு விவகாரத்துல இந்த பசங்களோ இல்ல இவங்களுக்கு ரொம்ப நெருக்கமான யாரோ சம்பந்தப்பட்டுருப்பாங்களா??? அதுக்கு ஏதாவது வாய்ப்பு இருக்குமா???", என்றேன்.

"அப்டி இருக்க வாய்ப்பே இல்லை சார். அவங்க ரொம்ப நல்ல பசங்க. சண்டைக்கு போற அளவுக்கு அவங்களுக்கு தைரியம் கெடையாது. அந்த அளவுக்கு அவங்களுக்கு backgroundம் இல்ல", என்றார் அவர்.

"அந்த 3 buildings கட்டுன contractorsக்கு யாராவது எதிரி இருந்து அவங்க பண்ண வேலையா இருக்குமா???", என்றேன்.

"இல்ல சார். Tenderல வந்தா தான் அந்த மாதிரி நடக்க வாய்ப்பு இருக்கும். இது tender விஷயம் இல்ல. அதனால அந்த மாதிரி நடந்துருக்க வாய்ப்பு இல்ல சார்", என்றார்.

"ம்ம்... ரொம்ப நன்றி சார்", என்றேன்.

அவங்க கிளம்புனாங்க.

இருந்தது ஒரு route. அதுவும் இப்ப dead end ஆயிருச்சு. இந்த கேஸ் என்ன ரொம்ப சோதிக்குது. அடுத்து என்ன பண்ணப்போறேன்னு தெரியல.

தீவிரவாதிங்க involve ஆகல. தனிப்பட்ட பகை இல்ல. அப்ப இத பண்ணது யாரு...??

Aye.Jey... Part - 1Where stories live. Discover now