நீ வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று சொல்லி சென்று விட்டாய்.
நேரமோ நள்ளிரவு மணி 12.00 யை நெருங்கி கொண்டிருக்கிறது.
வானமோ மழை வரும் அறிகுறி காட்டிக் கொண்டிருக்கையில்மாலை நேரம் மழைத்தூறும் காலம் பாட்டை பாடிக்கொண்டே என் தொலைப்பேசி சிணுங்கியது.
ஹலோ வணக்கம் என்று நான் கூறியவுடன் "நான் இன்று விருந்திற்கு சென்று விட்டேன் , வீட்டிற்கு சொந்தமாக சென்று விடு"
ஒரு புறம் ஆத்திரம் மறு புறம் அழுகையும் சேர்ந்துக்கொள்ள , "அப்புறம் எதற்காக என்னை காக்க சொன்னீர்கள், முதலிலே சொல்ல வேண்யது தானே. தாலி கட்டின மனைவி என்று தானே ஒரு இளக்காரம். நானே சென்றுக் கொள்கிறேன் நீங்கள் உங்கள் வேலையையே கட்டிக் கொண்டுஅழுங்கள்."
அழுகையை அடக்கி கொண்டு தொலைப்பேசி வைத்துவிட்டேன்..
ஆத்திரத்தில் கன்னம் காது சூடேரி இருந்தது.இந்நேரத்தில் எந்த வாடகை வண்டியை பிடிப்பது..பேசாமல் அலுவலகத்திலேயே தங்கி விடலாமா என்றை யோசிக்கையில்மீண்டும் என் தொலைப்பேசி சிணுங்கியது.
அழைப்பு அல்ல குறுஞ்செய்தி .
"நான் வருகிறேன்... காத்திரு... "
மீண்டும் அதே கட்டளை இடும் தோரணையில்....
கட்டளை ... கட்டளை.. என்று தீருமோ .
YOU ARE READING
காதல் - உன்னுள் என்னுள் (Love - In You And ME)
FanfictionA Love Story of you and me