பணம் காட்டும் நிறம்

40 1 0
                                    


பணம் காட்டும் நிறம்

"உங்களுக்கு என்னங்க? ராணி மாதிரி உங்கள பாத்துக்கும் புருஷன்! ஏழு தலைமுறைக்கும் இருக்கற சொத்து..ம்ம்ம்..இதுக்கு மேல என்னங்க வேணும்?" என்று பெருமூச்சு விடும் சொந்தத்துக்கு தெரியுமா சுமித்திரையின் வேதனை?

"இங்க இவ்வளவு சொத்து இருந்து என்ன பிரயோஜனம்? திருமணமாகி பதின்நான்கு வருடங்கள் உருண்டோடியும் ஒரு குழந்தை அம்மா என்று அழைக்கும் பாக்கியம் இல்லாது போனது எந்த ஜென்மத்து பாவம்? அதுவும் மருத்துவரீதியாக தன்னால் குழந்தையை பெற முடியாது என்று மருத்துவர் கூறிய அன்று; அந்த நிமிடம் தான் உணர்ந்ததை எவ்வாறு சொல்வேன்! சொன்னால் தான் புரியுமா?" என்ற எண்ணத்தில் சுமித்ரா மனதிற்குள் குமைந்தாள்.

சமீபகாலமாக தோன்றும் ஒரு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் எண்ணம் வலுப்பெற்றது. அதை செயலாக்கும் விதமாக கணவருடன் ஆலோசித்து உடனடியாக ஒரு வாடகைத் தாயை மருத்துவர் மூலம் ஏற்பாடு செய்ய கூறிய பின்னரே மனம் கொஞ்சம் ஆசுவாசமானது.

நான், கமலா. நான் தவமாய் தவமிருந்து முதல் பெண்ணிற்கு பிறகு பெற்றெடுத்த ஆண் வாரிசு, செல்வம். இவன் ஜனனமே என் புகுந்த வீட்டில் எனக்கு கிட்டும் ஏச்சுக்கள் குறைய காரணம். அதுவரை ஏதோ பெண் பிள்ளையை பெற்றதை குறையாக கூறும் வீட்டோடு இருக்கும் மாமியாரின் புலம்பல் நின்றது.

"எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க." என்ற என் கதறலை கண்டுக்கொள்ளாமல்

"அதுதான் சொல்லியாச்சே. நீங்க தேவையான பணம் தயார் பண்ணுங்க" என்று நர்ஸ் கூறி சென்றது என்னை எவ்விதத்திலும் சமாதானப்படுத்தவில்லை.

"அவ்வளவு பணம் இல்லைங்க. ஏற்கனவே ஊரசுத்தி கடன் வாங்கியாச்சு. வேற எந்த விதத்துலயும் பணம் புரட்ட முடியலங்க. இனி ஆண்டவனா ஒரு வழி காண்பிச்சாதான் உண்டு. புள்ள உசுர காப்பாத்தி தந்தாங்கன்னா கோடி புண்ணியமா போகும்." என்று பக்கத்தில் இருந்தவரிடம் தான் என்னால் புலம்பமுடிந்தது

பணம் காட்டும் நிறம்Where stories live. Discover now