முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று ஒரு பெண் அழகாய் கண்களுக்கு மைதீட்டி கொண்டு இருந்தாள்.பார்க்க இந்த கால நடிகை லட்சுமி மேனன் போல அழகாக இருந்தாள்.சற்று குண்டான உடல்வாகு,கலையான முகம் .அப்போது அவளை பின்னால் இருந்து ஒரு குரல் அழைத்தது.சாரா மா டைம் ஆச்சு சீக்கிரம் கிளம்புடா? என்று அவளை அழைத்து கொண்டு இருந்தார் அவளின் அப்பா.ரொம்ப யோசிக்காதிங்க...!இவள் தான் நம் கதையின் heroine saravenkat
Dad!please wait i will come .இன்று சாராவிற்கு முதல் நாள் கல்லூரி.அவள் மிகவும் பதட்டத்துடனும்,படபடப்புடனும் இருந்தாள்.அப்பா போலாம் என்றாள்.அவள் அப்பா வெங்கட் அவளை கல்லூரியில் சென்று விட்டார்.அவள் முதல் நாள் என்பதால் கொஞ்சம் சீக்கிரமாகவே கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள்.சாரா முதலாம் ஆண்டு B.E(ece) சேர்ந்து உள்ளாள்.அவள் வகுப்பறையை தேட ஆரம்பித்தாள்.அப்போது யாரோ ஒருவர் மீது மோதி விட்டாள்.அவளுக்கு அது யார் என்று திரும்பி பார்க்க கூட நேரமில்லை.சாரி..!என்று மட்டும் கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.ஒரு வழியாக வகுப்பறையை தேடி கண்டுபிடித்து விட்டாள்.
அவள் வகுப்பறைக்கு முன்னதாகவே சென்று விட்டாதால் ஒரு பெஞ்சில் அமர்ந்து சற்று ஒய்வு எடுத்தாள்.பிறகு வகுப்பறைக்கு மாணவர்கள் வர ஆரம்பித்தார்கள்.அவள் அருகில் ஒரு பெண் வந்து அமர்ந்தாள்.அவளை பார்த்து புன்னகை செய்தாள்.அவள் சாராவை பார்த்து நான் உங்களை ஆல்ரெடி பார்த்து இருக்கேன் அட்மிஷன் அப்போ ..என்றாள்.
பிறகு இருவரும் தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டார்கள்.அவள் பெயர் நிவேதா என்கிற நிவி.பிறகு இருவரும் தங்களுள் நிறைய பேசி கொண்டார்கள்.அவளின் அழகான புன்னகையும்,குழந்தைதனமும் சாராவிற்கு மிகவும் பிடித்து இருந்தது.மாலை நேரம் கல்லூரி முடிந்தது அனைவரும் அவர்கள் ஊருக்கு செல்லும் பேருந்தை நோக்கி சென்றார்கள்.சாராவும் அவள் பேருந்திற்கு சென்றாள்.அவள் பேருந்தின் கதவை திறக்க முயன்றாள்.ஆனால் திறக்க முடியவில்லை.அப்போது பேருந்தினுள் இருந்து ஒரு கை கதவை திறந்து விட்டது.அவன் யார்?என்று பார்த்தாள்.6அடி உயரம்,ஒல்லியான தேகம்,கண்களில் தீர்க்கமான கம்பிரமும்,உதடுகளில் புன்னகையும் கொண்டு இருந்தான் அவன்.அப்போது சாராவின் நினைவை பின்னால் இருந்து ஒரு குரல் கலைத்தது.