காட்சி-4

558 24 5
                                    

முதல் நாள் மழையில் நனைந்தால் சாரா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாள்.அதன் விளைவாக அவள் கல்லூரிக்கு செல்லவில்லை.ஆனால் அவள் மனம் அவளுக்கு அந்த கண்கள் அதில் வழிந்த கண்ணீர் அதை மட்டும் ஞாபகப்படுத்தியது.அவள் மனம் ஏனோ அவனை பற்றியே யோசித்து கொண்டு இருந்தது.அந்த காய்ச்சலையும் மீறி ஏதோ அவன் கண்களில் தெரிந்த அன்பு அவளை ஆட்கொண்டு இருந்தது.இங்கோ இவள் இப்படி யோசித்து கொண்டு இருக்க அங்கு லோகேஷ் அவள் ஏன் வரவில்லை என்று பதறி கொண்டு இருந்தது.

அவன் முதல் நாள் சாராவிடம் கடுமையாக நடந்து கொண்டதால் அவன் மீது அனைவரும் கோபமாக இருந்தார்கள்.அவனிடம் யாரும் பேசவில்லை.அதனால் யாரிடமும் கேட்க முடியவில்லை சாராவிற்கு என்ன ஆயிற்று என்று? அவனுக்கு இந்த உணர்வு புதுமையாக இருந்தது.

அவள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருந்தாள்.அவளுக்கு உரிய சிகிச்சை அளிக்க அவளை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள்.சாராவின் அண்ணா மற்றும் அவன் நண்பர்கள் எல்லாம் சென்று அவளை பார்த்து வந்தார்கள்.

லோகேஷ் இந்த விஷயம் அவன் நண்பர்கள் மூலமாக வந்து சேர்ந்தது.அவன் உடனே துடிதுடித்து போனான்.அவளை பார்க்க வேண்டும் தோன்றியது.உடனே மருத்துவமனைக்கு சென்றான்.அங்கே அமைதியாய் உறங்கி கொண்டு இருந்தாள் சாரா.இவன் அவள் முன் நின்று நெடுநேரம் பார்த்து கொண்டு இருந்தான்.அப்போது அவன் கண்களில் இருந்து வந்த கண்ணீர் அவள் கையில் விழுந்தது. அவள் கண் இமைகள் அசைய தொடங்கியது. உடனே அவன் அங்கிருந்து சென்று விட்டான்.அவன் கண்ணீரின் துயரம் அவளை சுட்டு இருக்க வேண்டும் அது தான் அவள் விழித்து கொண்டாள்.

அவள் சுற்றி பார்த்தாள்.யாரும் இல்லை.அங்கே இருந்த நர்ஸிடம் யார் வந்தது என்று கேட்டாள்.அவள் உடனே உங்கள் நண்பர் என்று சொன்னார் என்று சொன்னாள்.சாரா சிறிது யோசித்து விட்டு எப்படி இருந்தார் என்று கேட்க அவள் அடையாளம் சொல்ல சாரா யூதித்து விட்டாள் வந்தது லோகேஷ் என்று!

அவள் குழம்பி போய் இருந்தாள்.ஏன் அவன் நம்மை பார்க்க வர வேண்டும்.முன் ஒருநாள் அவன் கண்களில் கண்ட கண்ணீர் ஞாபகம் வந்தது.அவள் அப்படியே யோசித்து கொண்டே உறங்கி போய் இருந்தாள்.

Hello frds... extremely sry .....konjam work athan upload panna mudiyum la I am very sry dear's

உன்னில் என்னை காண்கிறேன்Where stories live. Discover now