"நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் தீயவர்கள் இல்லை. உன் உறவினா்கள், தோழர்கள்.இப்படி உன்னை சுற்றி இருக்கும் ஆடவர்கள் அனைவரும் தீய குணம் படைத்தவர்கள் இல்லை. எல்லாரிடமும் பயம் கொள்ளாதே, நேசமாகவும் பார் ", என்று தான் கூறி வளர்த்தார்கள்.
இருப்பினும் பயமும் நானும் இரட்டை சகோதரிகள் போல சமுதாயத்தில் தனியாக செல்ல பயமாக தான் இருக்கிறது. அந்த பயத்தை உடைக்கவே தனியாக பயணிக்க துணிந்தேன்.
சுற்றி ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். யாரையும் எனக்கு தெரியவில்லை. பயமாக இருக்கிறது. இருப்பினும் பயணிக்க தயாரானேன்.
உன் உறவினர்கள் நாங்கள் என்று கூறி ஒரு கூட்டமே என்னை தேடி வருகிறது. ஆனால் ஏன் என்னை நெருங்கும் அனைத்து ஆண்களும், சொல்லி வைத்தார் போல் என் உடலையே பார்க்கிறார்கள்? என் உடல் நடுங்குகிறது. பயத்திலேயே அவர்களை தாண்டி வெளியே வந்தேன்.
சிலர் நண்பர்கள் என்று அருகில் வந்தனர். ஆனால் ஏன் தவறாக தொடுகிறார்கள்? அப்போ... அவர்கள் என் நண்பர்கள் இல்லை...! என்னை ஏமாற்றியிருக்கிறார்கள்...!
அவர்களையும் கடந்து தப்பிக்க எண்ணி இரயிலில் ஏறினேன். யார் என்றே தெரியவில்லை. என்னை என்னமோ செய்தனர். என்ன என்றும் புரியவில்லை. ஆனால் வலி! வலி! உயிரே போனது... அவ்வளவு வலி. இறுதியில் இரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டேன். என் உயிர் இறுதி கட்டத்தில் இருக்கும் போது தோன்றியது... "நான் குமரி ஆகிய பின் தான் இந்த இருளான உலகில் சிக்கிக்கொண்டேன் ஆகையால் தான் இந்த நிலைமை", என்று. அப்பாடி இறக்கப்போகிறேன். நிம்மதி...!நிம்மதி...! மீண்டும் குழந்தையாக பிறக்கப்போகிறேன்.
இதோ....
இதோ....
நான் பிறந்துவிட்டேன்...!!!சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ம்கும்ம், நான்கு வயதாகிய என்னை முன்பு அவர்கள் செய்த எதையோ தான் இவனும் செய்துவிட்டான். மீண்டும் வலி...ஆனால் இந்த உலகை விட்டு சீக்கிரம் சென்றுவிடுவேன். வலியை தாங்க முடியவில்லை. இப்போதும் ஒன்று தோன்றியது, "அடி பேதை பெண்ணே! குழந்தையாக இருந்தால் பாதுகாப்பு, மகிழ்ச்சி என்று யார் கூறினார்கள்? பெண்ணாக பிறந்துவிட்டாலே, உனக்கு இது தான் கதி", என்று...
போதும் இந்த சமுதாயத்தில் சித்திரவதைப்படும் பெண்ணாக பிறக்க வேண்டாம். சித்திரவதைப்படுத்தும் ஆணாக ஒரு போதும் பிறக்க வேண்டாம். வேண்டாம்...!வேண்டாம்...! எனக்கு பிறப்பே வேண்டாம்..!!!😭"Special thanks to my lovable cousin harini and my lovable sister sweetiej10"😍😍😍
YOU ARE READING
பிறப்பே வேண்டாம்
Randomஇந்த சமுதாயத்தில் சித்திரவதைப்படும் பெண்ணாக பிறக்க வேண்டாம். சித்திரவதைப்படுத்தும் ஆணாக ஒரு போதும் பிறக்க வேண்டாம். வேண்டாம்...!வேண்டாம்...! எனக்கு பிறப்பே வேண்டாம்..!!!