சித்தார்த் மற்றும் ஆனந்த் செங்கமலம் மெடிக்கல் காலேஜில் லெக்சரராக வேலைப் பார்க்கின்றனர்.காலேஜில் புதிதாக சேரும் சஹானாவை சித்தார்த் விரும்புகிறான்.ஆனால் அவளின் படிப்பு முடியும் வரை சொல்வதில்லை என முடிவெடுக்கிறான்.சஹானாவிற்கு சித்தார்த்தை பிடித்திருந்தாலும் அவன் அவளின் ஆசிரியர் என்பதால் அவள் அதை சொல்ல வில்லை.சஹானாவின் மருத்துவ படிப்பின் நான்காம் வருடத்தில் சித்தார்த்தால் சஸ்பெண்ட் ஆன மாணவன் ஜெகன் காலேஜ் கலாட்டா ஒன்றில் சித்தார்த்தை குத்தி கொன்று விடுகிறான்.சஹானாவின் எதிரிலேயே சித்தார்த்தின் உயிர் பிரிந்து விடுகிறது.சஹானா தனக்குள் ஒடுங்கி விடுகிறாள்.
இனி...............