எங்கே சுதந்திரம்?

8 1 0
                                    

#எங்கே #சுதந்திரம்?

அந்தி சாய்ந்தபின் தனியே நடந்து செல்பவள் மழலையோ(அ)மங்கையோ யாராயினும் வல்லாங்கு செய்து வீசி எறியப்படுவாள்

ஏனெனில் இந்தியா சுதந்திர தேசம்

தன் உரிமைகளுக்காக போராடுபவனிடம் குண்டர் சட்டம் பாயும்

தன் இனத்தை அழித்து ஒழித்தவனுக்கு இராணுவ பாதுகாப்போடு உபசரிப்பு நடைபெறும்

ஏனெனில் இந்தியா சுதந்திர தேசம்

அடுத்த வேளை சோற்றுக்கே அல்லாடுபவனிடத்தில்

அவனின் நிலத்தை அழித்து அதிவேக சாலையிடப்படும்

ஏனெனில் இந்தியா சுதந்திர தேசம்

அண்டை நாட்டிலிருந்து வரும் பறவைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் என் தேசம்

சுத்தமான மூச்சுக்காற்றை கேட்டு போராடியவனை சுட்டு கொல்ல ஆணையிட்டு வேடிக்கை பார்க்கும்

ஏனெனில் இந்தியா சுதந்திர தேசம்

நாட்டு சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்தவனுக்கு ஐந்தடி சிலைகூட இல்லாத போது

அகிலத்தையே சுரண்டி சொத்து குவித்தவனுக்கு மணிமண்டபம் கட்டுகிறது

ஏனெனில் இந்தியா சுதந்திர தேசம்

விடுதலைக்கு பின்பும் அடிமையாக்கப்படுவோம் என்பதை அறிந்தே

கண்களை மூடிக்கொண்டார்கள் போலும்

என் தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள்

_மு.ச.செந்தில் குமார்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Aug 15, 2018 ⏰

Add this story to your Library to get notified about new parts!

எங்கே சுதந்திரம்? Where stories live. Discover now